Monday 12 November 2012

கடவுளே துணை (காலி மணிபர்ஸ்)



    சிலர் கடுதாசி எழுதும்போது கடவுள் துணை என்றுதான் எழுதுவது வழக்கம். கடவுளே துணை என்று ஏன் எழுதுவதில்லை தெரியுமா? கடுதாசிபோய்ச் சேருவதற்கு ஸ்டாம்பு துணை, சரியான விலாசம் துணை, தபாற்காரரின் நாணயமும் துணை என்றாலும், கடவுளும் துணையாயிருக்கட்டுமே, என்பது அதன் பொருள்!

       ஆனால், பெரியவர்கள் முதல் பெரியவர்களல்லாதவர்கள் வரையில், இப்போது கடவுளே துணை என்று கூற ஆரம்பித்திருக்கிறார்கள்!
வங்காளத்தில் நான் எவ்வளவு நாள் தங்கியிருப்பேன் என்பது எனக்குத் தெரியாது. அடுத்தபடியாக நான் என்ன செய்யவேண்டும் என்பதைக் கடவுளே எனக்குச் சுட்டிக்காட்டவேண்டும் என்கிறார் காந்தியார். இதுதான் நல்ல பேச்சு! அடுத்தபடி இவர் தப்பாக நடந்துகொண்டாலும் கடவுள் தப்பு வழியில்அழைத்துப் போய்விட்டார், என்று கூறித் தப்பித்துக் கொள்ளலாம்! ஒரு வேளை நல்ல காரியமாக ஏதேனும் நடந்துவிட்டாலும், கடவுள் காந்தியாருக்கு எப்போதுமே துணையாக நிற்கிறார்; அதனால்தானே மகாத்மா என்ற பட்டம் பெற்றார், என்பார்கள் பாமரமக்கள். அதாவது பத்திரிகை படிப்பவர்கள்!

            ஆனால், இவருக்குச் சுட்டிக்காட்டவேண்டிய கடவுள் இந்துக் கடவுளா, முஸ்லிம் கடவுளா என்பதுதான் தெரிய வேண்டும்! ஏனெனில் வங்காளத்தில் கடவுள் ஒருவர் என்பதை நம்புகிறவர்கள் மிகக் குறைவாகவே இருப்பதாகத் தெரிகிறது. கடவுளும் கல்கத்தா காளிக்கு இரத்த அபிஷேகம் செய்து வேடிக்கைப் பார்க்கிறாரே தவிர, பிரிட்டிஷ் இராணுவத்தின் உதவியை நாடாமல், காந்தியாரின் அந்தாரத்மா மூலமாக இந்து-முஸ்லிம் ஒற்றுமையை உண்டாக்குவதாகக் காணோம்!

       காந்தியார்தான் இப்படி கடவுள்மீது பாரத்தைப் போட்டு விட்டார் எனக் கருதவேண்டியதில்லை. மந்திரி ராகவமேனன் திருச்செங்கோட்டில் பேசுகையில் பஞ்சத்தினால் ஒருவரும் உயிர்விடக் கூடாது என்று கடவுளைப் பிரார்த்திக்கிறேன், என்று கூறியிருக்கிறார். கவலை ஒழிந்தது மந்திரியாரே! பசி, பசி! என்று இனிமேல் யாராவது கதறினால் நீர் சஞ்சலப்படவேண்டியதே இல்லை. கடவுள் இருக்கிறார்! நீங்கள் சாகமாட்டீர்கள்! என்று ஒரே வார்த்தையில் கூறி விடலாம்! அப்படியே செத்தால்தான் என்ன மோசம்! கடவுளே இவ்வாறு கட்டளையிட்டார், என்று சொல்லிவிட்டால் போகிறது!
சரி, கடவுளரே! நீர் இனிமேல் ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும். பெரியவர்கள் மட்டுமல்ல; சந்தேகப்படக்கூடிய ஆசாமிகள்கூட உங்கள் பெயரைத்தான் சொல்கிறார்கள்! கடவுள் சாட்சியாக நான் திருடவில்லை என்கிறான், மூர்மார்கெட்டில் முடிச்சவிழ்த்த முனிசாமி! ஆனால் நீர் மட்டும் மாஜிஸ்ட்ரேட்டுக்கு முன்பு வந்து ஒருநாளாவது சாட்சிக் கூண்டில் ஏறியிருப்பீரா? என்ன இரக்கமற்ற நெஞ்சு ஸார் உங்களுக்கு!
குடிஅரசு - கட்டுரை - 02.11.1946

திராவிடர்களே இன்னுமா தீபாவளி?



            வழக்கம்போல் பஞ்சாங்கத்தில் தீபாவளி வரப்போகிறது. சுமார் 20 வருட காலமாகத் தீபாவளியைப் பற்றித் திராவிட மக்களுக்கு விளக்கிக் கொண்டு வந்திருக்கிறோம். திராவிட நாடு தனி சுதந்திர நாடாக ஆக்கப்பட்டுத் திராவிடர்கள் சமயம் எது? அவர்கள் சரித்திரம் என்ன? அவர்கள் மனிதத் தன்மை பெறுவதற்கு ஏற்றவண்ணம் நடத்தப்படுவதற்கு வகுக்கப்பட வேண்டிய முறை என்ன? என்பவைகளை அரசியல் சட்ட மூலமாகவும், பள்ளிப் பாட மூலமாகவும் ஏற்பாடு செய்து அமல் நடத்துகிற வரையிலும் திராவிடர்கள் தம்மை இழிவுபடுத்தி நிரந்தரமாய் அழுத்தி வைக்கப் பட்டிருக்கும் தன்மைலிருந்து மீட்கப்பட முடியாது என்பதோடு திராவிடர்கள் தம்மைத் தாமே இழி மக்களாக ஆக்கிக் கொண்டு தங்கள் பின் சந்ததிகளையும் இழிதன்மையில் இருந்து மீளாமல் இருக்கத்தக்க காரியங்களைச் செய்து கொண்டுதான் இருப்பார்கள்.
               இன்று திராவிடர்களின் சமயம் அதாவது மதம் என்பது பெயரளவில் இந்து மதம் என்று சொல்லப்பட்டாலும், அதற்கு எவ்வித பொருளும், ஆதாரமும் இல்லை என்றாலும் உண்மையில் திராவிடர்கள் மதம் என்பது ஆரியப் புராண மதமேயாகும். கிறிதவர்கள், இலாமியர்கள் முதலாகிய இந்துக்கள் அல்லாத மற்ற வேறு எந்தச் சமயக்காரர்களுக்கும் மதங்கள் உண்டு என்றால் அவைகள் பைபில் மதம் (அதாவது சத்திய வேதம் மதம்) குர்ரான் மதம் (திருக்குர்ரான்படி நடக்கும் மதம்) என்றெல்லாம் பெரிதும் சொல்லப்படுமே ஒழிய வேறு விதமாய் இருப்பதில்லை. ஆனால் திராவிடர்கள் தம்மை இந்து மததர்கள் என்று சொல்லிக் கொண்டாலும், அப்படிச் சொல்லிக் கொள்ளுகிறவர்கள் அத்தனை பேர்களும் ஆரியப் புராண மதக்காரர்களாகத்தான் இருந்தும், நடந்தும் வருகிறார்களே தவிர தங்களுக்கு என்று வேதமோ சாதிரமோ இல்லாதவர்களாகவே இருந்து வருகிறார்கள்.
திராவிடர்களுக்கு வேதம் கிடையாது. இருப்பதாகச் சொல்லப்படுமானால் அது திராவிடர்களுக்கு சம்பந்தப்பட்டதல்லவென்றும், திராவிடர்கள் பார்க்கவோ தெரிந்து கொள்ளவோ கூடியது அல்ல என்றும்தான் சொல்லப்படுமே ஒழிய திராவிடர்களுக்குரிய வேதம் கிடையாது. திராவிட வேதம் என்று எதையாவது சொல்லப்படுமானால், அது திராவிடர்கள் பின்பற்றுகிற - நடத்தப்படுகிற தன்மைக்கும், நடப்புக்கும் கட்டுப்பட்டதுமல்ல; பின்பற்றச் செய்வதுமல்ல.

            திராவிடர்களுக்கு ஏதாவது சாதிரங்கள் இருக்குமானால் அவை திராவிடர்கள் இன்ன மாதிரியாய் நடத்தப்பட வேண்டியவர்கள் என்றும், நடத்தப்பட வேண்டும் என்றும், திராவிடரல்லாத மற்றவர்களுக்கு அதிகாரம் அளிப்பதும், ஆக்கினை இடச் செய்வதுமான சாதிரங்களே ஒழிய திராவிடர்கள் தாமாகவே நடந்து கொள்ளுவதற்கு ஏற்றதான சாதிரங்கள் அல்ல. ஆகவே, திராவிடர்களாகிய நாம் சமயம் வேதம் சாதிரம் ஆகிய எவையுமில்லாத ஒரு நிபந்தனையற்ற- திக்கற்ற அடிமைச் சமுதாயமாக இருந்து வருகிற ஒரு இழிவான, தாக்கப்பட்ட சமுதாயதர்களே யாவோம். இந்தப்படியான இழிவை நிலை நிறுத்தவும், திராவிடர்கள் தாங்களே அந்த இழிவைச் சிறிது நேரமாகிலும் இறக்கி வைக்காமல் சதா சுமந்து கொண்டே இருக்கச் செய்வதற்குமாக ஆரியர்களால் (எதிரிகளால்) ஏற்படுத்தப்பட்ட புராணங்களைப் பின்பற்றி நடப்பவர்களாக, இருப்பவர்களாகவே இருந்து வருகிறோம்.

           இனி புராணங்களின் கருத்து என்ன என்று பார்ப்போம்
திராவிடர் ஆரியர் என்கின்றதான (தேவர்கள் அசுரர்கள் என்கின்ற) இரு இனங்களைக் குறிப்பிடுவதும், திராவிடர்களை (அசுரர்களை) ஆரியர்கள் (தேவர்கள்) இழிவுபடுத்தி, அடிமைபடுத்திக் கீழ்மைப்படுத்திக் கொண்டதாகக் கற்பனை செய்யப்பட்ட கற்பனைச் சித்திரங்கள் அல்லாமல் மற்றபடி புராணங்களைப் பற்றிச்சொல்லவோ அதைப் பின்பற்றவோ புராணங்களில் என்ன இருக்கிறது என்று யாராவது சொல்ல முடியுமா?
தேவர்களை அசுரர்கள் தொல்லைப் படுத்தினார்கள், சிவன், விஷ்ணு என்கின்ற கடவுள்கள் தோன்றி அசுரர்களை வெற்றிகொண்டு, தேவர்களுக்கு அடிமையாக்கிக் கொடுத்து, தேவர்களைக் காப்பாற்றினார்கள் என்கின்றதாகவேயில்லாமல் மற்றப்படியான மனிதர்களுக்கு வேண்டியதான அறிவோ, ஒழுக்கமோ, நீதியோ, நாணயமோ எந்தப் புராணங்களிலாவது கடுகளவு காண முடிகிறதா?

            அப்படிப்பட்ட புராணங்களில் காணப்படும் நடப்புகளைக் கொண்டாடுவதும் அவைகளில் சொல்லப்பட்டபடி நடப்பதும்தான் இன்று திராவிடர்களின் சமயமாக, நடப்பாக இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டவே இவ்வளவு சொன்னோம்.

           இப்படியாகச் சொல்லப்படுபவைகளுக்கு ஓர் உதாரணம்தான் திராவிட மக்கள் தீபாவளி கொண்டாடுவது என்கின்றோம். இதை 20 வருடங்களுக்கு மேலாகச் சொல்லி வருகிறோம் என்பதை மேலே கூறினோம். அப்படி இருந்தும் இன்னமும் திராவிடர்கள் தீபாவளி கொண்டாடுகிறார்கள் என்பதைக் கருதியே இனியாவது கொண்டாடாதீர்கள் என்று வேண்டிக் கொள்ளுவதற்கு ஆகவே இந்த ஆண்டும் சொல்லுகிறோம்.
தீபாவளி என்பது என்ன? என்று பாருங்கள். திராவிடர் நாட்டில் பிராக் சோதிட புரி (வங்காளத் துக்கு பக்கத்தில் இருந்ததாம்) என்ற ஒரு நகரம் இருந்ததாம். அந்த நகரத்தை நரகாசுரன் என்று ஒரு அரசன் ஆண்டானாம். அவன் யார் என்றால் ஒரு பன்றி பூமியைப் புணர்ந்து பூமியைக் கர்ப்பமாக்கி, அந்தப் பூமியால் பெறப்பட்ட ஒரு அசுரனாம். அந்தப் பன்றி யார் என்றால், மகாவிஷ்ணு பன்றியாக அவதாரமெடுத்த பன்றியாம். இந்தப் பன்றிக்குப் பிறந்தவன் என்பதாக அந்த அரசனுக்கு ஒரு இழிவைக் கற்பிக்கத்தான் இந்தக் கதையைக் கற்பித்து புராணங்களில் ஒட்டவைத்திருக்க வேண்டுமே அன்றி மற்றபடி கடவுள் மலம் தின்னும் பன்றி உருவெடுத்ததும் அந்தப் பன்றி நிலத்தை (தரையை பூமியை)ப் புணருவது என்பதும் அந்த நிலம் கர்ப்பமாகிப் பிள்ளையைப் பெற்றது என்பதும் எப்படி அப்படியே நம்பக் கூடியனவாக இருக்க முடியும்?

           ஆகவே இதன் இரகசியம் என்ன என்றால் திராவிட நாட்டு எல்லையில் பிறந்தவர்கள் அத்தனை பேரும் இழி மக்கள் என்பதைக் குறிப்பதற்காக அந்த நாட்டு மக்களாகிய திராவிட இனத்தினரைப் பன்றிக்குப் பிறந்தவர்கள் என்று ஆதாரத்தை ஏற்படுத்தினார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அந்த அரசன் தேவர்களை (ஆரியர்களை) தொல்லைப்படுத்தினான் என்பதாகச் சொல்லி அவன் மீது பழியேற்படுத்தி அவனை விஷ்ணு கொன்றார் என்றும் அக்கொலைக்கு விஷ்ணுவின் மனைவி சத்தியபாமை உதவி செய்தாள் என்றும் என்ன என்னமோ ஆபாசக் கதைகள் கட்டி இருக்கிறார்கள். அதிலும் அந்த விஷ்ணு என்பவர் கிருஷ்ணன் என்கிற ஒரு மனிதன்தானாம். அந்த மனிதன் இலட்சக் கணக்கான பெண்களை மணந்தவனாம். பல இலட்சக்கணக்கான பெண்களைப் புணர்ந்தவனாம். நரகாசுரனைக் கொன்று அவனுடைய 10 பெண்களையும் மணந்தவனாம். இன்னமும் இப்படிப்பட்ட ஆபாசங்கள் ஒரு வண்டிக்கு மேல் ஏற்றும் படியான சேதிகளைத் தான் இந்தப் புராணங்கள் கொண்டிருக்கின்றன.

           இப்படிப்பட்ட புராணங்களைச் சமய ஆதாரங்கள் என்று ஏற்றுக் கொண்டு, அதில் வரும் சம்பவங்களைப் பின்பற்றுவது புண்ணிய காரியமென்று கருதிக் கொண்டு அப்படிப்பட்ட நரகாசுரன் கொல்லப்பட்டதற்கு மகிழ்ச்சி அடைந்து கொண்டாடுவது தான் நமது தீபாவளிப் பண்டிகை என்றால் இந்தக் கதை எப்படி இருந்தாலும் இந்தக் கொண்டாட்டம் (தீபாவளி) நாம் கொண்டாடுவது நமக்கு (திராவிடனுக்கு) மானமும், அறிவும் உடைமையாகுமா? என்று கேட்கிறோம்.
ஆகையால் தீபாவளியைத் திராவிடர்களாகிய நாம் வெறுக்கும் தினமாகக் கருதி, திராவிடத் தோழர்கள் அன்றைய தினம் பழைய கருப்பு உடைகளை, சட்டைகளை அணிந்து துக்கம் கொண்டாடும் பாவனையாய் இந்த இழிவு, பித்தலாட்டம், புராண ஆபாசங்கள் ஒழிய வேண்டும் என்கின்ற ஒலியுடன் ஊர்வலம் வந்து இந்தக் கதையை மக்களுக்கு எடுத்துச் சொல்லி உண்மை உணரும்படி செய்ய வேண்டியது கடமையாகும். மற்றபடி அன்று எண்ணெய் முழுக்கு, புதுவேஷ்டி அணிதல், வீட்டில் பலகாரம் செய்து சாப்பிடுதல் முதலியவை அடியோடு ஒழிக்கப்பட வேண்டும்.

    தீபாவளி கொண்டாட வேண்டாம். அது திராவிடனை இழிவுபடுத்தி மூடனாக்கும் ஆரிய சூழ்ச்சி என்பதை மக்கள் உணரும்படி துண்டு நோட்டீசு எழுதுதல் மூலம் மக்களுக்கு விளக்க வேண்டும். இதைப் பெரிதும் கருப்புச் சட்டைத் தொண்டர்கள் செய்யவேண்டும். இப்போதிருந்தே பொதுக் கூட்டங்கள் மூலம் தெளிவுபடுத்த வேண்டும்.
இந்தக் கூட்டத்தில் அரசியல் பேச்சு, காங்கிர, கம்யூனிட் முதலிய கட்சி பேச்சு சிறிதும் பேசக் கூடாது. தீபாவளி கொண்டாடாதவர்கள் தங்கள் பெயர்களை எழுதி அனுப்பச் செய்ய வேண்டும் என்பவைகளைக் கவனிக்க வேண்டுகிறோம். குறிப்பு :- ஆங்காங்குள்ள திராவிடப் புலவர்களைக் கொண்டு தீபாவளிக் கதையைத் தெரிந்து கொள்ளலாம்.
குடிஅரசு - தலையங்கம் - 12.10.1946

Saturday 20 October 2012

தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தர மறுக்கும் கருநாடகத்துக்கு நெய்வேலி மின்சாரத்தைக் கொடுக்காதே!




தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தர மறுக்கும் கருநாடகத்துக்கு நெய்வேலி மின்சாரத்தைக் கொடுக்காதே! - நெய்வேலியில் தமிழர் தலைவர் தலைமையில் நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு கைதான தமிழர் தலைவர் அவர்கள், 90 வயதைக் கடந்த முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் அரியலூர் மாவட்டம் பொதுக்குழு உறுப்பினர் மு.சிங்காரம் பங்கேற்றதைக் கழகத் தோழர்கள் மத்தியில் அவரது மனஉறுதியையும் கொள்கை பிடிப்பையும் எடுத்துக்கூறி பாராட்டி பயனாடை அணிவித்தார் (நெய்வேலி, 15.10.2012).

Saturday 6 October 2012

புரட்டாசி சனிக்கிழமை -தந்தை பெரியார்



    அடுத்தாற்போல் வரும் புரட்டாசி சனிக்கிழமை உற்சவங்களும், திருப்பதி முதலிய நூற்றுக்கணக்கான சனிக்கிழமைப் பெருமாள்கள் உள்ள ஊர்களின் உற்சவங்களும், சனிக்கிழமை பிடிப்பதன் மூலம் அவரவர்கள் வீட்டில் ஏராளமாய் சமைத்துக்கொண்டு சோம்பேறிகளையும் அயோக்கியர்களையும் மெனக்கட்டுத் தேடிப் பிடித்து வந்து அவர்களுக்கு வயிறு நிறையவும் போட்டு மற்றும் மூட்டை கட்டிக் கொண்டும் போகக்கூடிய அளவு மேல்கொண்டும் போட்டு கஞ்சாவுக்கோ கள்ளுக்கோ சூதாடவோ கையில் பணமும் கொடுத்து, இவ்வளவும் போறாமல் அந்த நாளெல்லாம் பட்டினி கிடந்து அந்தச் சோம்பேறிகளின் காலிலும் விழுந்து மாலை 3 மணி 4 மணி சுமாருக்கு சாப்பிடும் பண்டிகையிலோ விரதத்திலோ கடுகளவு அறிவு இருக்கின்றதா என்று கேட்கின்றேன். புரட்டாசி சனிக்கிழமை வந்தால் எத்தனை பேர்கள் தங்களுக்கும் பட்டை நாமம் போட்டுக் கொண்டு செம்புக்கும் நாமத்தை குழைத்து போட்டுக் கொண்டு, துளசியை அரளிப்பூவையும் அந்த செம்புக்கு சுத்திக் கொண்டு வெங்கிடாசலபதி கோவிந்தா என்றும் நாராயணா கோவிந்தா என்றும் கூப்பாடு போட்டு அரிசியோ காசோ வாங்கிக் கொண்டு போவதில் ஏதாவது பலனுண்டா? என்றுதான் கேட்கின்றேன்.

    மற்றும், திருப்பதிக்குப் போகிறேன் என்று சொல்லிக் கொண்டு தலை மயிரும் தாடி மயிரும் வளர்த்து வெறும் மஞ்சள் நனைத்த துணிக்கட்டிக் கொள்ளுவதும் மேளம் வைத்துக் கொள்வதும் பெண்டுபிள்ளைகள் சுற்றத்தார்களை அழைத்துக் கொள்வதும் வருஷமெல்லாம் பணம் போட்டு மொத்தமாய் பணம் சேர்ப்பதும் அல்லது வேண்டுதலையின் மேல் இவ்வளவு பணம் என்று கடன் வாங்கியாவது எடுத்துக் கொள்வதும் அல்லது வியாபாரத்திலோ வேறு வரும் படியிலோ லாபத்தில் இத்தனை பங்கு என்று கணக்கு வைத்து சேர்த்து எடுத்துக் கொள்வதும் ஆன பணமூட்டை கை கட்டிக்கொண்டு கடைவாயிலும் நாக்கிலும் வெள்ளிக் கம்பியைக் குத்திக் கொண்டு போதாக்குறைக்குத் தெருவில் கூட்டமாய் கோவிந்தா கோவிந்தா- கோவிந்தா! என்று கூப்பாடு போட்டு வீட்டுக்கு வீடு, கடைகடைக்கு காசு பணம் வாங்கி ஒருபகுதியை ரயிலுக்குக் கொடுத்து திருப்பதி போவதும், அங்கு முழங்கால் முறிய மலையேறுவதும் ஆண்களும் பெண்களும் தலைமொட்டை அடித்துக் கொள்வதும் அந்தமலைச்சுனைத் தண்ணீரில் குளிப்பதும் அந்த பட்டை நாமம் போட்டுக் கொள்வதும் கொண்டுபோன பணத்தைக் கடாரத்தில் காணிக்கையாக கொட்டுவதும் ஆண்களும் பெண் களும் நெருக்கடியில் இடிபடு வதும் பிடிபடுவதும் வெந்ததும் வேகாததுமான சோற்றை தின்பதும் மற்றும் பல சோம்பேறிகளுக்கும் மேகவியாதிக்காரர்களுக்கும் வேக வைத்தோ விலைக்கு வாங்கியோ போடுவதும் விறகு கட்டை யிலும் வேர்களிலும் செய்த மரமணி மாலைகளை வாங்கி கழுத்தில் போட்டுக் கொள்வதும். மலைக் காய்ச்சலோடு மலையைவிட்டு இறங்கி வருவதும் வீட்டுக்கு வந்து மகேஸ்வரபூஜை பிராமண சமார்த்தனை செய்வதும் தவிர மற்றபடி இவைகளால் ஏதாவது செய்தவனுக்கோ, கூடப்போன மக்களுக்கோ நாட்டுக்கோ ஒழுக்கத்திற்கோ மதத் திற்கோ கடுகளவு நன்மை உண்டாகுகின்றதா என்று கேட்கின்றேன்.
திருப்பதிக்குப் போய் வந்த பிறகாவது யாராவது தங்கள் துர்க்குணங் களையோ கெட்ட செய்கைகளையோ விட்டுவிட்டதாகவாவது அல்லது திருப்பதி யாத்திரையானது இம்மாதிரி குணங்களை விடும்படி செய்ததாகவாவது நம்மில் யாராவது பார்த்திருக் கின்றோமா? என்று கேட்பதுடன் இம்மாதிரி அறிவீனமான காரியத்திற்கு நமது நாட்டில் வருஷத்திற்கு எத்தனை கோடி ரூபாய் செலவாகின்றது என்பதை எந்தப் பொருளாதார இந்திய தேசிய நிபுணராவது கணக்கு போட்டார்களா என்று கேட்கின்றேன்.

காவிரி கருநாடகத்துக்கே எனில் தமிழ்நாடு யாருக்காம்?


- க. சிந்தனைச்செல்வன்
அரியலூர் மாவட்ட செயலாளர்



    

     பிரச்சினைகளுக்கு மத்தியில் மட்டுமே வாழ்கின்ற இனமான தமிழனின் இன் றைய தேதிக்கான பிரச்சினை காவிரிநீர் கண்களில் கவலையோடு காவிரிக்காக காத்திருக்கும் டெல்டா மாவட்ட விவ சாயிகள். நீரின்றி அமையாது உலகு என்றான் வள்ளுவப் பெருந்தகை. மூன் றாம் உலகப் போர் நடக்கப் போவது தண்ணீருக்காகவே என்கிறார்கள் ஆய் வாளர்கள். இப்போது தமிழ்நாடு தண்ணீ ருக்காக பக்கத்து மாநிலங்களோடு போராட - போரிட வேண்டியிருக்கிறது.
பிச்சையா? உரிமையா?
இயற்கை அமைப்பின்படி தமிழ்நாட் டின் பாசனத்திற்கு தேவையான நீரை காவிரி, முல்லைப் பெரியாறு போன்றவை தான் கொடுத்து வருகின்றன. காவிரியில் புதிது புதிதாய் அணைகளைக் கட்டி தண்ணீரை கருநாடகா தேக்கிக் கொண்டதால் தமிழன் கண்ணீரையே பாசனத்திற்கு பயன்படுத்த வேண்டிய நிலை. தனக்கு மிஞ்சிதானே தானதருமம் என்று பிரச்சினையின் தன்மை புரியாமல் பேசும் மூடர்களாய் வாழும் மக்கள் கூட்டம் ஒருபுறம். காவிரி கருநாடகத்தில் தோன்றுவதால் அவர்களுக்கு மட்டுமே உரிமை என்ற தவறான புரிதலோடு பிரச்சினையை அணுகும் யாராக இருந் தாலும் உலகியல் சட்டப்படி, நியாயப்படி நீரியல் சட்டப்படி ஆயக்கட்டு உரிமை என்பது கடைமடைப் பகுதி வரை அனை வருக்கும் உண்டு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். காவிரி நீர் என்பது தமிழர்களின் உரிமை  - பிச்சையல்ல. நாட்டின் முதுகெலும்பு விவசாயம் என்கிறான். விவசாயிகளின் வாழ்வா தாரம் பாதிக்கப்படும் போது - முது கெலும்பு முறிக்கப்படும்போது கண்டும் காணாமல் இருக்கும் நடுவண்அரசு.
அந்நியன் ஆண்டபோது...
காவிரிநீரைப் பகிர்ந்துகொள்வது தொடர்பாக 1892ஆம் ஆண்டு பழைய மைசூரு அரசுக்கும், சென்னை அரசாங்கத் துக்கும் வெள்ளையர்கள், அந்நியர்கள் ஆண்டபோது ஒப்பந்தம் போடப்பட்டு அது பின்னர் 1924ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது. 50 ஆண்டு களுக்கான அந்த ஒப்பந்தம் 1974ஆம் ஆண்டு மறுஆய்வு செய்து புதுப்பித் திருக்க வேண்டும். 1974 முதல் கருநாடகா தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர மறுத்து வஞ்சித்து வருகிறது. பல முறை பேச்சு வார்த்தை என்ற பெயரால் ஏமாற்று வேலை நடத்தியது கருநாடக அரசு.
நடுவர் மன்றம் அமைத்திட
பிரச்சினையை தீர்க்க நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று 1980-களிலேயே சொன்ன இயக்கம் திராவிடர் கழகம். நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்பதற்காக போராடி சிறை சென்ற தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி. அந்த கருத்து நாளும் வலுப் பெற்று சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள் ஆட்சிக் காலத்திலே நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு, விசாரித்து இடைக்கால தீர்ப்பாக 205 டி.எம்.சி. தண்ணீரை கருநாடகம் தமிழ்நாட்டிற்கு கொடுக்க வேண்டும் என்று சொன்ன போது அதையும் அமல்படுத்தவில்லை கருநாடகா. அணை நிரம்பி உடையும் நிலை வந்தால் மட்டுமே தண்ணீரை திறந்து விடும் போக்குதான் இன்றளவும் தொடர்கிறது.

காவிரி நதியில் மொத்தம் உள்ள 740 டி.எம்.சி. தண்ணீரில் தமிழகத்திற்கு 419 டி.எம்.சி. தண்ணீரும், கருநாடகா 270 டி.எம்.சி., கேரளா 30 டி.எம்.சி., புதுச்சேரி 7 டி.எம்.சி. தண்ணீரையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று 2007 ஆம் ஆண்டு நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பும் இன்றுவரை நடைமுறைப்படுத்தப் படவில்லை. 9 ஆண்டுகளுக்குப்பிறகு நீதிமன்ற கட்டாயத்தின் பேரில் கூடிய காவிரி நதிநீர் ஆணையம் 19.9.2012 அன்று கூடி கலைந்தது. தமிழ்நாட்டின் குறைந்தபட்ச தேவையான ஒரு நாளைக்கு 2 டி.எம்.சி. தண்ணீர் வேண் டும் என்ற தற்காலிக கோரிக்கையும் புறக்கணிக்கப்பட்டு 9000 கனஅடி நீரை (3/4 டி.எம்.சி) திறந்துவிட பிரதமர் மன்மோகன் உத்தரவிட்டார். அதையும் நிறைவேற்ற மறுத்து அடம்பிடிக்கிறது கர்நாடகா. தமிழக அரசு மீண்டும் உச்ச நீதிமன்றத்தை அணுகியபோது கருநா டகா காவிரியில்  உடனடியாக தண்ணீர் திறந்து விட வேண்டும். இல்லையேல் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது. மீண்டும் துவங்கிவிட்டது கருநாடகாவில் போராட்டம் - ஆர்ப்பாட்டம் மறியல், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கொடுக்காதே காவிரி கருநாடகாவுக்கே என்றெல்லாம் ஆர்ப்பரிக்கிறார்கள். கன்னட அமைப்பினர் மறியல் போராட்டம், போக்குவரத்து பாதிப்பு எல்லைகளில் வாகனங்கள் நிறுத்தம் சாம்ராஜ் நகர், மாண்டியா மாவட்டங்களில் தொடரும் போராட்டம். உருவ பொம்மைகள் கொளுத்துதல் என்று சண்டித்தனம் செய்யும் கன்னடர்கள். தமிழ் நாட்டை அச்சுறுத்த நினைக்கிறார்களா?
தேசியம் பேசும் கட்சிகள்
தேசியம் என்பது மனிதனுக்கு ஒரு மயக்கமும் வெறியும் உண்டாக்கும் வார்த்தை என்றார் பெரியார். இந்திய தேசிய மயக்கம் கொண்ட ஒருமைப்பாடு பேசும் காங்கிரசு, பாரதிய ஜனதா, கம்யூனிஸ்ட் கட்சிகள் மாநிலத்திற்கு மாநிலம் கட்சிநலன், ஓட்டு நலன், கருதி இரட்டை வேடம் போட்டு இந்திய தேசியம் என்பதே பித்தலாட்டம் என்று நிரூபிக் கிறார்கள். தமிழன் இன உணர்வு பேசினால் வகுப்புவாதம், பிரிவினைவாதம் என அலறும் தேசியக் கட்சிகள் செய்வது என்னவகை அரசியல்! தமிழர் நலனைப் புறக்கணித்து இந்திய தேசியத்தை காட்டிக் காக்கும் வெறியோடு செயல்படும் கட்சிகளை புறந்தள்ளுவோம்.
ஜனநாயகம் என்ற பெயரால் தந்திரத்திலும் வஞ்சகத்திலும், மக்களின் அறியாமையினாலும் ஆட்சி செய்யும் அரசாங்கத்தைவிட, துப்பாக்கியாலும், பீரங்கியாலும் ஆட்சி செய்யும் அரசாங்கம் மேலானது என்றார் பெரியார்.
தோழர்களே ஜனநாயகம் என்ற பெயரால் நடக்கும் கேலிக் கூத்துகளை ஒதுக்க வேண்டாமா? ஈழப் பிரச்சினை, மீனவர் பிரச்சினை, இடஒதுக்கீட்டு பிரச்சினை, முல்லைப் பெரியாறு, காவிரிநீர் இப்படி எல்லாவற்றிலும் நம்மை வஞ்சிக்கின்ற தேசியம் நமக்கு தேவையா என்பதை நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டாமா? தனியாட்சியல்ல - மாநில சுயாட்சிகூட வழங்க மறுப்பது நியாயமா? வரலாற்றின் பக்கங்களில் இந்தியா ஒரே நாடா? காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை 5 ஆண்டுகளுக்கு மேலாக கெசட்டில் வெளியிடாத காவிரி நடுவர் மன்றத்திற்கு தலைவரை நியமிக் காத மத்திய அரசு தமிழகத்தை தனது நாட்டின் ஒரு பகுதியாக கருதுகிறதா - இல்லையா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். பிரதமர் உத்தரவை ஏற்க மறுக் கும் கருநாடகத்தின் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுவது ஏன்?
தமிழர்களே, தமிழ்நாட்டு நலனைப் புறக்கணிக்கின்ற யாரையும் புறக்கணிக் கின்ற மனநிலை நமக்கு வர வேண்டும். கருநாடகத்தின் தேவைக்கு போகத்தான் காவிரி நீர் தமிழ் நாட்டுக்கென்றால் நமது தேவைக்கு போகத்தான் நெய்வேலி மின்சாரம் அடுத்தவனுக்கு என்று நாம் சொல்ல வேண்டும் ஒரு சொட்டு நீர் கூட தர மாட்டோம் என்றால் யூனிட் மின்சாரம் கூட அளிக்க முடியாது கூடாது என்ற நிலையை நாம் ஏற்படுத்த வேண்டும். உணர்ச்சி பெற வேண்டும் தோழர்களே காவிரி தஞ்சை மாவட்டத்தின் பிரச்சினை யல்ல தமிழர்களின் உரிமைப் பிரச்சினை. உரிமைகளை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம்.
தனித்தனி நாடுகளில் ஏற்படும் நதிநீர் பிரச்சினைகள் தீர்க்கப்படும்போது ஏக இந்தியாவில் ஏன் தீர்க்க முடியவில்லை! சிந்திக்க வேண்டாமா?
காவிரி கருநாடகத்துக்கே என்று அவர்கள் சொன்னால் தமிழ்நாடு யாருக் காம்? கனடாவுக்குப் பக்கத்திலா இருக் கிறது தமிழ்நாடு?

Friday 5 October 2012

காவிரி நதி நீர் உரிமை பிரச்சாரப் பயணம்






ஜெயங்கொண்டம்/வி.கைகாட்டி/அரியலூர், அக். 5- அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம், விளாங்குடி கைகாட்டி மற்றும் அரியலூரில் காவிரி நதி நீர் உரிமை பிரச்சாரப் பெரும் பயணக் கூட்டம் அக்டோபர் 3 ஆம் தேதி நடைபெற்றது. கூட்டத் தில் தலைமைக் கழகப் பேச்சாளர் மாங்காடு சுப.மணியரசன் தொடக்கவுரையாற்றினார்.  கழகச் சொற்பொழிவாளர் தஞ்சை இரா. பெரியார்செல்வன் சிறப்புரையாற்றினார்.
முன்னதாக உத்திரக்குடி சு.கலைவாணனின் மந்திரமா தந்திரமா எனும் அறிவியல்விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
ஜெயங்கொண்டம்
ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா அருகில் நடைபெற்ற கூட்டத் தில் ஒன்றிய செயலாளர் மா.கருணாநிதி வரவேற்றார். மண்டல செயலாளர் சி.காமராசு தலைமை ஏற்றார். அரியலூர் மாவட்டத் தலைவர் விடுதலை நீலமேகன்,மாவட்ட செயலாளர்க.சிந்தனைச்செல்வன், பொதுக்குழு உறுப்பினர் கே.பி.கலிய மூர்த்தி, நகர தலைவர் எம்.எஸ்.நாராயணன், பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் பு.கா.அன்பழகன், ஒன்றியத் தலைவர் வை.செல்வராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றியத் தலைவர் ரா.தமிழரசன், ஒன்றிய செயலாளர் தியாக.முருகன், ஒன்றிய அமைப்பாளர் சி.தமிழ்சேகரன், மாவட்ட இளைஞரணி செயலாளர் க.கார்த்திகேயன், உட்கோட்டை சி.பரமசிவம், ஆண்டி மடம்க.செந்தில், ராஜேஷ், ஆசிரியர் பிச்ச முத்து உள்பட பலர் கலந்துகொண்டனர். நிறைவாக நகர செயலாளர் துரை.பிரபாகரன் நன்றி கூறினார்.
வி.கைகாட்டி
விளாங்குடி கைகாட்டி கடைவீதியில் நடைபெற்ற கூட்டத்தில் அரியலூர் ஒன்றிய துணைத் தலைவர் மு.மருதமுத்து வரவேற்றார். அரியலூர் ஒன்றியத் தலைவர் சி. சிவக்கொழுந்து தலைமை ஏற்றார். மண் டல செயலாளர் சி.காமராசு, அரியலூர் மாவட்டத் தலைவர் விடுதலை நீலமேகன், மாவட்ட செயலாளர் க.சிந்தனைச்செல்வன், பொதுக்குழு உறுப்பினர் மு.சிங்காரம், அரியலூர் நகர தலைவர் ரா.கோவிந்தராசன், ஒன்றிய செயலாளர் ந.செல்லமுத்து, ஒன்றிய அமைப்பாளர் மு.கோபாலகிருட்டிணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட அமைப் பாளர் கோ.பாண்டியன், மண்டல இளைஞரணி அமைப்பாளர் மு.ராசா,வட்ட துணைத்தலைவர் ரா.திலீபன், மாவட்ட துணைச் செயலாளர் ரத்தின.ராமசந்திரன், ப.க மாவட்டத் தலைவர் பு.கா.அன்பழகன், மாவட்ட இளைஞரணித் தலைவர் பொன். செந்தில்குமார், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் லெ.அர்ச்சுணன், மாவட்ட இளைஞரணி செயலாளர் கா.கார்த்திகேயன், ஒன்றியத் தலை வர் மா.சங்கர், மறவனூர் மதியழகன், ம.தமிழ்மணி, மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் வெ.இளவரசன், ஒன்றிய செயலாளர் சோ.க.சேகர், ஒன்றிய அமைப்பாளர் மு.முத் தமிழ்ச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண் டனர். நிறைவாக உல்லியக்குடி தங்கராசு நன்றி கூறினார்.
அரியலூர்
அரியலூர் வட் டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற கூட்டத்தில் அரியலூர் ஒன்றிய அமைப்பாளர் மு.கோபாலகிருட்டிணன் வரவேற்றார். அரியலூர் நகர தலைவர் ரா.கோவிந்தராசன் தலைமை ஏற்றார். மண்டல செயலாளர் சி.காமராசு, அரியலூர் மாவட்டத் தலைவர் விடுதலை நீலமேகன், மாவட்ட செயலாளர் க.சிந்தனைச்செல்வன், அரியலூர் ஒன்றிய தலைவர் சி.சிவக்கொழுந்து, அரியலூர் ஒன்றிய செயலாளர் ந. செல்லமுத்து, ப.க மாவட்ட துணைத் தலைவர் பா.இளங்கோவன், பொதுக்குழு உறுப்பினர்கள் மு.சிங்காரம், பேரா.தங்கவேல், சு.மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட அமைப்பாளர் கோ.பாண்டியன், மண்டல இளைஞரணி அமைப்பாளர் மு.ராசா, மாவட்ட துணைத் தலைவர் ரா.திலீபன், மாவட்ட துணைச் செயலாளர் ரத்தின.ராமச்சந்திரன், ப.க மாவட்டத் தலை வர் பு.கா.அன்பழகன், மாவட்ட இளைஞரணித் தலைவர் பொன்.செந்தில்குமார், மாவட்ட இளைஞரணி செயலாளர் கா.கார்த்திகேயன், ஒன்றியத் தலைவர் மா.சங்கர், மறவனூர் மதியழகன்,ம.தமிழ்மணி, மாவட்ட இளைஞரணி துணைச்செயலாளர் வெ.இளவரசன், ஒன்றிய செயலாளர் சோ.க.சேகர், ஒன்றிய அமைப்பாளர் மு.முத்தமிழ்ச்செல்வன், எனோலா சி.அண்ணாதுரை, பிரச்சார பயண ஒருங்கிணைப்பாளர் த.சீ.இளந்திரையன், புத்தக விற்பனையாளர்கள் சாந்தகுமார், பிரகதீஷ், ஓட்டுநர்கள் விஜய், வெற்றி உள்பட பலர் கலந்துகொண் டனர். நகர செயலாளர் துரை.காமராஜ் நன்றி கூறினார்.


Monday 1 October 2012

தாசிகளுடன் ஒரு மடாதிபதி


குடிஅரசு தரும் வரலாற்றுக் குறிப்புகள்
தேச சஞ்சாரம் செய்து கொண்டு திரியும் ஒரு பார்ப்பன வைணவ மடாதிபதி இயல்பாய் இருக்க வேண்டிய மாசற்ற நடையின்றி இரவில் பலரும் அறியத் தாம் தங்கியுள்ள இடத்திற்கே தாசிகளைப் பயமின்றி வரவழைத்து, அவர்களிடம் ஒரு மாதிரி சிரித்துக் கொண்டும், குறும்புத்தன மாகவும் பேசுவார், இப்படிப்பட்ட ஆச்சாரியரிடம் நமது இளம் பெண்கள் பயபக்தியுடன் சென்று புண்ணியத்தை நிரப்பிக் கொண்டு வருவதை நினைக்கும் பொழுது கோபமும், துக்கமும் நமக்கு வராமலிருக்குமா? வந்து என்ன பயன்? நம் பெண்கள் தற்பொழுதும் சாமியார் களைத் தேடி மடங்களுக்குச் செல்வது குறைய வில்லையே! என் செய்வது?
ஒரு ஆச்சாரியரின் அடாதசெய்கை
அக்காலத்தில் கல்வி அறிவில் மிக்க தேர்ந்தவர்களாயும், உலக விஷயங்களில் இச்சையற்று மாசற்ற தடையை உடையவர்களாயும், தனது சீடர்களுக்கு உபதேசம் செய்து அவர்களை நல்வழிப் படுத்துவதிலேயே கவலை உடையவர்களாயும் உள்ள உத்தமர்களை ஆச்சார்யர்களாக வைத்திருந்தார்கள். இக்காலத்திலுள்ள, ஆச்சாரியர்களில் பெரும்பாலோர் பல விதத்திலும் குறைசொல்லக் கூடும்விதமான இருக்கின்றனர். பணம் தட்டிப் பறித்துக் கொண்டு போவதற்காகவே பெரும் பாலோர் சீடர்கள் வசிக்கும் இடங்களுக்குச் செல்லுகிறார்களே தவிர அவர்களுக்கு வேறு கவலை கிடையாது. தனக்கும் கொஞ்சம் கல்வி அறிவு இருக்கிறது என்பதைக் காட்டுவதற்காக தாங்கள் தங்கியிருக்கும் இடங்களில் இரண்டொரு காலக்ஷேபங்கள் செய்து ஏமாற்றுவதும் உண்டு. பணம் பெற்றுக்கொண்டு போவதுடன் நிற்காமல் அவர்கள் ஊரில் சிலருடைய செய்கை அறிவுடையார் மிக்க வெறுக்கத் தக்க நிலைமையில் இருந்து வருகின்றன. அவ்விதம் தற்சமயம் ஒரு வைணவப் பார்ப்பன மடாதிபதி தேச சஞ்சாரம் செய்துகொண்டு திரிகின்றார். அவர் அநேகமாக செல்லும் இடங்களில் எல்லாம் இரவில் பலரும் அறியத் தங்கியிருக்-கும் வீட்டிற்கே தாசிகளைப் பயமில்லாமல் வரவழைக்கிறார். யாராவது, தாசி இங்கு எதற்காக வரவேண்டுமென்று கேட்டால், இரண்டொரு வயிற்றுச் சோற்றுப் பக்தர்-களைத் தயார் செய்து வைத்துக் கொண்டு அவர்களை விட்டு, தாசிகள் சுவாமிகளிடம் சமார்ச்சனை செய்துகொள்ளுவதற்கு வந்து அலைந்து கொண்டிருக்கிறார்களென சொல்லச் செய்கிறார். இப்பேர்ப்பட்ட ஆச்சாரியரிடத்தில் நமது இளம் பெண்களைப் பக்தியுடன் சென்று சமார்ச்சனைச் செய்து-கொண்டு திரௌபதி வஸ்திராபரணம் கதையையும் கேட்கின்றார்கள். இவர்கள் பெண் பிள்ளைகளிடத்தில் பேசும்பொழுது ஒரு மாதிரி சிரித்துக்கொண்டும், குறும்-புத்தனமாகவும் பேசுகிறார். இந்தப் பார்ப்-பனருடைய கர்வமும், இறுமாப்பையும் நமம்மக்களிடம் உள்ள மடமையையும் நினைக்கும் பொழுது கோபமும் துக்கமும் வராமலிருக்குமா? கன்னி மேயோவிற்கு இவரைப்பற்றித் தெரியாமல் போய்விட்டது போலும்.
- தேவிதாஸன் குடிஅரசு11.12.1927, பக்கம், தகவல் முநீசி

பெரியார் சிலைக்கு மாலை





செப்.17 அன்று காலை 9 மணியளவில் அரியலூர் மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன் தலை மையில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் தி.மு.க. பேச்சாளர் ச.அ.பெருநற்கிள்ளி, விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் செ.வே.மாறன், வி.சி. கட்சியின் பொறுப்பாளர் கரிகாலன், ப.க. மாவட்ட செயலாளர் தங்க.சிவமூர்த்தி, பக. மாவட்ட அமைப்பாளர் இரா.இளங்கோவன், பொதுக்குழு உறுப்பினர் சு.மணிவண்ணன், பொன்.செந்தில் குமார், க.தனபால், மா.சங்கர், சோ.க.சேகர், இளவழகன், இராச.செல்வகுமார், பெ.கோபால், பதனம் இராமதாஸ், வெ.இளவரசன், ப.கருணாநிதி, மு.முத்தமிழ்ச்செல்வன், அரங்க.இளவரசன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. செந்துறை அண்ணா சிலையில் அமைந்துள்ள கொடிக்கம்பத்தில் கொடியேற்றப் பட்டது.இறுதியாக செந்துறை சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப் பட்டது. இறுதியாக ஒன்றிய தலைவர் சங்கர் நன்றி கூறினார்.

Friday 7 September 2012

தமிழர்களின் அய்ந்து முக்கியப் பிரச்சினைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்ம்


அரியலூர்

சென்னை, செப்.3- இந்தியாவில் இலங்கை இராணுவத்தினருக்கு பயிற்சிஅளிக்கக் கூடாது. தமிழக மீனவர்கள் பிரச்சினையை தீர்க்க வேண்டும், கச்சதீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சேது சமுத்திரக் கால்வாய்த்திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும். காவிரி நீர் பெற்றுத் தரவேண்டும். முல்லைப்பெரியாறு நீர்ப்பிரச்சினை தீர்க்கப்படவேண்டும். பதவி உயர்வில் தாழ்த்தப் பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடுஅளிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை களை வலியுறுத்தியும், மத்திய அரசைக்கண்டித்தும் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் திராவிடர் கழகத்தின் சார்பில்  (31.8.2012) அன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள் வருமாறு:
அரியலூர் வட்டாட்சியர் அலுவலகம்முன்பு அரியலூர்மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் 31.8.2012 அன்று நடை பெற்றது. ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன் தலைமையில் மாவட்ட துணைச் செயலாளர் இரத்தின.இராமச்சந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள்: மு.சிங்காரம், சு.மணி வண்ணன், மண்டல இளைஞரணி செயலாளர் மு.இராசா ஆகியோர் முன்னிலையில் நடை பெற்றது. கழக தோழர்கள் திரளாக ஒலி முழக்க மிட்டனர். இறுதியாக அரியலூர் மாவட்ட செயலாளர் க.சிந்தனைச்செல்வன், திருச்சி மண்டல செயலாளர் சி.காமராசு ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஒன்றிய தலைவர் சி.சிவகொழுந்து, அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். இறுதியாக ஒன்றிய செயலாளர் செல்லமுத்து நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பொன்.செந்தில் குமார், க.கார்த்திகேயன், வெ.இளவரசன் மாசங்கர், சோ.க.சேகர், மு.முத்தமிழ்ச்செல்வன், த.சுப்புராயன், இரா.தமிழரசன், சொ.மகாலிங்கம், பழ.வெங்கடா சலம், நா.மருதமுத்து, இரா.கோவிந்தராசன், ப.மதியழகன், அ.இளவழகன், சே.எழில்மலை, கோ.கோபால் மற்றும் ஏராளமான தோழர்கள் கலந்துகொண்டனர்.

வருமானத்தைப் பற்றி கவலைப்படாமல் தொண்டு செய்பவர்கள் தி.க. தோழர்கள் இணை ஏற்பு விழாவை தமிழர் தலைவர் நடத்தி வைத்து விளக்கவுரை


வை.கலையரசன் - உ.கனிமொழி ஆகியோரது இணை ஏற்பு விழாவினை தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் நடத்தி வைத்தார். உடன் குன்னம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.சிவசங்கர் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் உள்ளனர்.
அரியலூர், செப். 2- அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், உல்லியக்குடி பெ.வைத்தியலிங்கம் - தங்கம் ஆகியோரது மகனும் வடசென்னை மாவட்ட இளைஞரணி செயலாளருமாகிய வை.கலையரசன், சோழன்குறிச்சி உத்ராபதி - தனம் ஆகியோரின் மகள் உ.கனிமொழி ஆகியோரது வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழா உல்லியக்குடி சமுதாயக்கூடத்தில் 31.8.2012 வெள்ளி காலை 10.30 மணியளவில் தொடங்கி சிறப்பாக நடைபெற்றது.
திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் பெரியார் திடலில் பணியாற்றும் வை.கலையரசன் திடலின் செல்லப்பிள்ளை என்றும், சுயமரியாதை வீரர்கள் உடையார்பாளையம் வேலாயுதம், உல்லியக்குடி அரங்கசாமி ஆகியோரை நினைவு கூர்ந்து வரவேற்புரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன், மண்டல செயலாளர் சி.காமராஜ், சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் திருமகள் இறையன், கழக அமைப்பு செயலாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், ஒன்றிய குழு உறுப்பினர் அன்பழகன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் கா.சொ.க.கண்ணன், பெருநற்கிள்ளி, தி.மு.க. மாவட்ட செயலாளரும், குன்னம் சட்டபேரவை உறுப்பினருமான எஸ்.எஸ்.சிவசங்கர் ஆகியோரின் வாழ்த்துரைக்கு பின்னர் தமிழர் தலைவர் வாழ்வியல் உரையாற்றி வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவை நடத்தி வைத்தார்.
தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தனது உரையில், சின்னஞ்சிறிய கிராமமான இந்த உல்லியக்குடிக்கு தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் உட்பட பலமுறை நானும் வருகை புரிந்துள்ளேன். சுயமரியாதை வீரர் அரங்கசாமி பலமுறை எங்களை அழைத்துள்ளார். இந்த ஊர் மட்டுமல்ல அரியலூர் மாவட்டமே சுயமரியாதைப் பயிர் செழித்த பூமி.
தந்தை பெரியார் கட்டளையை ஏற்று ஜாதி ஒழிப்புப் போராட்டம் மற்றும் பல்வேறு போராட்டங்களில் ஏராளமாக சிறை சென்றவர்களின் மண் இந்த மண் என்று நினைவு கூர்ந்தார். பேராசிரியர் இறையனால் அறிமுகப்படுத்தப்பட்டு மு.நீ.சிவராசனால் வளர்க்கப் பட்ட நல்ல தொண்டு செய்யக்கூடிய தோழர் கலையரசன், குடிஅரசு தொகுப்பிலே அவரது பணி பாராட்டுக்குரியது என்றும், தந்தை பெரியாரால் பெண்கள் பெற்ற உரிமைகள் திருமண மந்திரங்களின் பொருளையும் எடுத்துக்கூறி வாழ்வியல் உரையாற்றினார். நிகழ்ச்சியை மாவட்ட செயலாளர் க.சிந்தனைச் செல்வன் ஒருங்கிணைத்தார். உல்லியக் குடி சிற்றரசு நன்றி கூறினார்.
அரியலூர் மாவட்ட துணைச் செயலாளர் இரத்தின.இராமச்சந்திரன், மண்டல இளைஞரணி செயலாளர் மு.ராசா, மாவட்ட இளைஞரணி தலைவர் பொன்.செந்தில்குமார், மாவட்ட இளைஞ ரணி செயலாளர் க.கார்த்திகேயன், மாவட்ட ப.க. தலைவர் பு.கா.அன்பழகன், மாவட்ட ப.க. செயலா ளர் தங்க.சிவமூர்த்தி, ஒன்றிய பொறுப்பாளர்கள் சொ.மகாலிங்கம், பி.வெங்கடாசலம், சி.தமிழ்சேகரன், செயங்கொண்டம் ஒன்றிய செயலாளர் மா. கருணாநிதி, செந்துறை ஒன்றிய தலைவர் மா.சங்கர், செயலாளர் சேகர்,
அமைப்பாளர் முத்தமிழ்ச் செல்வன், அரியலூர் ஒன்றிய தலைவர் சி.சிவக் கொழுந்து, செயலாளர் ந.செல்லமுத்து, அமைப்பாளர் கோவிந்தராஜ், செங்கமலம் பொதுக்குழு உறுப்பினர் மு.சிங்காரம், சுப்புராயன், வஞ்சினபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் க.தனபால், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் வெ.இளவரசன், தஞ்சை இளவரசன், மாநில ப.க. செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், இறைவி, மாட்சி, பண் பொளி, இசையின்பன், செங்குட்டுவன்,
சைதை செல் வம், மதியழகன், கலைமணி, விஜய், மணியம்மை, மரகதமணி, பார்த்தீபன், தமிழ்மைந்தன், ஜோதி ராமலிங்கம், கடலூர் கா.எழிலரசன் உள்ளிட்ட ஏராளமான தோழர்களும் உறவினர்களும் சிறப்பாக பங்கேற்றனர். முன்னதாக வி.கை.காட்டியில் தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பெரியார் பயிற்சி மய்யத்தின் ஒருங்கிணைப்பாளர் வை.கலையரசன் - உ.கனிமொழி மணவிழா தமிழர் தலைவர் நடத்தி வைக்கிறார்



பெரியார் பயிற்சி மய்யத்தின் ஒருங்கிணைப்பாளர் வை.கலையரசன் - உ.கனிமொழி மணவிழா தமிழர் தலைவர் நடத்தி வைக்கிறார்
சென்னை, ஆக. 30- வடசென்னை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி செயலாளரும், பெரியார் பயிற்சி மய்யத்தின் ஒருங்கிணைப்பாளரு மான செயல்வீரர் வை.கலையரசன் - உ.கனி மொழி ஆகியோரின் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழா, தமிழர் தலைவர் தலைமையில் 31.8.2012 வெள்ளிக்கிழமை காலை 10 மணி யளவில் அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம் உல்லியக்குடி மணமகன் இல்லத்தில் நடைபெற உள்ளது.
தலைமையேற்று நடத்தி வைப்பவர்:
மானமிகு கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்.
முன்னிலை:
எஸ்.எஸ்.சிவசங்கர் எம்.எல்.ஏ., (மாவட்டச் செயலாளர் தி.மு.க.)
தங்கள் வரவை எதிர்பார்ப்பவர்கள்: வை.சாமிதுரை-இளஞ்சியம்: உல்லியக்குடி; உத்திராபதி - தனம் : சோழங்குறிச்சி


தஞ்சாவூர், ஆக. 14- தஞ்சாவூர், திருச்சி மண்டல திராவிடர் கழகம் சார்பில் விடுதலை சந்தா வழங்கும் விழா 11.8.2012 சனி மாலை 6 மணியளவில் தஞ்சாவூர் ஆப்ரகாம்பண்டிதர் சாலையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கழக செயலவைத் தலைவர் இராசகிரி கோ.தங்கராசு தலைமை வகித்து உரையாற்றினார். தஞ்சை மண்டல திராவிடர் கழக தலைவர் வெ.ஜெயராமன், திருச்சி மண்டல செயலாளர் சி.காமராஜ், திருச்சி மண்டல தலைவர் ஞா.ஆரோக்கியராஜ் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர். தொடக்கத்தில் தஞ்சை மாவட்ட தலைவர் வழக்கறிஞர் சி.அமர்சிங் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.
தொடர்ந்து குடந்தை மாவட்டச் செயலாளர் க.குருசாமி, தஞ்சை மாவட்டச் செயலாளர் த.ஜெகநாதன், திருச்சி மாவட்டச் செயலாளர் ச.கணேசன், அரியலூர் மாவட்டச் செயலாளர் க.சிந்தனைச் செல்வன், பட்டுக் கோட்டை மாவட்டச் செயலாளர் பெ.வீரையன், பெரம்பலூர் மாவட்டத் தலைவர் ப.ஆறுமுகம், அரியலூர் மாவட்டத் தலைவர் விடுதலை நீலமேகம், திருச்சி மாவட்டத் தலைவர் மு.சேகர், கரூர் மாவட்டத் தலைவர் மு.க.ராசசேகரன், பட்டுக்கோட்டை மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், மாநில இளைஞரணி செயலாளர் தஞ்சை இரா.செயக்குமார், துணைப் பொதுச் செயலாளர் இரா.குணசேகரன், கழகப் பேச்சாளர் முனைவர் அதிரடி அன்பழகன் ஆகியோரின் உரையைத் தொடர்ந்து கழகப் பொதுச்செயலாளர் சு.அறிவுக்கரசு விடுதலை சந்தாத் தொகையினை பெற்றுக் கொண்டு சிறப்புரையாற்றினார்.
அவர் தனது உரையில்: விடுதலையின் சிறப்புகள், தமிழர் தலைவர் அவர்களின் 50 ஆண்டு கால விடுதலை ஆசிரியர் பணியின் உழைப்பு, டெசோ மாநாட்டின் சிறப்புகள் உள்ளிட்டவைகளை விளக்கி உரையாற்றினார். இறுதியாக நகர திராவிடர் கழகத் தலைவர் வ.ஸ்டாலின் நன்றி கூறினார்.
தஞ்சை மாவட்டம் 116 விடுதலை சந்தாக்கள்
தஞ்சை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் 3 ஆயுள் சந்தா 3 ஆண்டு சந்தா 110 அரையாண்டு சந்தாக் களை தஞ்சை மாவட்ட ஒன்றிய கழகப் பகுத்தறி வாளர் கழக பொறுப்பாளர்கள் வழங்கினார்கள்.
பட்டுக்கோட்டை - 225 விடுதலை சந்தாக்கள்
பட்டுக்கோட்டை கழக மாவட்டத்தின் சார்பில் 10 ஆண்டுச் சந்தா 215 அரையாண்டு மொத்தம் 225 சந்தாக்களுக்கான தொகையினை மாவட்ட ஒன்றிய கழகப் பொறுப்பாளர்கள் வழங்கினார்கள்.
கும்பகோணம் - 64 விடுதலை சந்தாக்கள்
கும்பகோணம் கழக மாவட்டத்தின் சார்பில் 1 ஆண்டு சந்தா 63 அரையாண்டு சந்தா மொத்தம் 64 சந்தாவுக்கான தொகையினை குடந்தை மாவட்ட ஒன்றிய நகரக் கழக பொறுப்பாளர்கள் வழங் கினார்கள்.
திருச்சி - 5 விடுதலை சந்தாக்கள்
திருச்சி கழக மாவட்டத்தின் சார்பில் 1 ஆயுள் சந்தா 17 ஆண்டு சந்தா 37 அரையாண்டு சந்தா மொத்தம் 55 சந்தாவுக்கான தொகையினை திருச்சி மாவட்ட ஒன்றிய நகர கழக பொறுப்பாளர்கள் வழங்கினார்கள்.
அரியலூர் - 60 விடுதலை சந்தாக்கள்
அரியலூர் மாவட்ட கழகத்தினர் விடுதலை சந்தாக்களை கழகப் பொதுச்செயலாளரிடம் வழங்கினர்.
அரியலூர் கழக மாவட்டத்தின் சார்பில் 19 ஆண்டு சந்தா 41 அரையாண்டு சந்தா என மொத்தம் 60 சந்தாக்களுக்கான தொகையினை அரியலூர் மாவட்டக் கழக ஒன்றிய நகர கழக பொறுப் பாளர்கள் வழங்கினார்கள்.
பெரம்பலூர் - 30 விடுதலை சந்தா
பெரம்பலூர் மாவட்ட கழகத்தினர் விடுதலை சந்தாக்களை கழகப் பொதுச்செயலாளரிடம் வழங்கினர்.
பெரம்பலூர் மாவட்டகழகம் சார்பில் 2 ஆயுள் சந்தா 28 அரையாண்டு சந்தா என மொத்தம் 30 சந்தாவுக் கான தொகையினை பெரம்பலூர் மாவட்டக் கழகப் பொறுப்பாளர் கள் வழங்கினார்கள்.
லால்குடி கழக மாவட்ட 12 சந்தா
லால்குடி கழக மாவட்டத்தின் சார்பில் 12 விடுதலை சந்தா வுக்கான தொகையினை வழங்கினார்கள்.
திருச்சி திராவிடர் தொழிலாளர் பேரவை - 21 விடுதலை சந்தா
திருச்சி பெல் திராவி டர்தொழிலாளர் பேரவை சார்பில் 20 அரையாண்டு சந்தா 1 ஆண்டு சந்தா மொத்தம் 21 சந்தாவுக்கான தொகை யினை வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் பங்கேற்றோர்: மாநில மகளிரணி பிரச்சார செயலாளர் வீ.கலைவாணி, மாநில மாணவரணி செயலாளர் ம.திராவிடஎழில், மாநில தொழிலாளர் பேரவை பொதுச் செயலாளர் பெல்.ஆறுமுகம், குடந்தை மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் சு.விஜயகுமார், கழகப் பேச்சாளர்      இரா.பெரியார் செல்வன், மண்டல இளைஞரணி செயலாளர் நா.இராம கிருஷ்ணன், குடந்தை மாவட்ட அமைப் பாளர் வ.அழகுவேல், தஞ்சை மாவட்டத் துணைத்தலைவர் ப.தேசிங்கு, குடந்தை மாவட்டத் துணைத் தலைவர் அரு.ரெங்க நாதன், பொதுக்குழு உறுப்பினர் ச.மணியன், பொதுக்குழு உறுப் பினர் புலவஞ்சி, இரா. இராமையன், தஞ்சை மாவட்ட துணைச் செய லாளர் சந்துரு, மாவட்ட விவசாயணி தலைவர் வை.இராஜேந்திரன், மாவட்ட ப.க. செய லாளர் கோபு.பழனிவேல், தஞ்சை மாவட்ட இளை ஞரணி தலைவர் மாநல். மெய்க்கப்பன், மாவட்ட இளைஞரணி செய லாளர் இரா.இளவரசன், தஞ்சை மாவட்ட இளை ஞரணி அமைப்பாளர் அல்லூர் பாலு தஞ்சை ஒன்றியத் தலைவர் மு.சே கர், ஒன்றிய செயலாளர் ஆட்டோ ஏகாம்பரம், தஞ்சை நகரச் செய லாளர் சு.முருகேசன், உரத்தநாடு ஒன்றியத் தலைவர் ஆ.இலக்கு மணன், ஒன்றிய செய லாளர் வழக்கறிஞர் அ.அருணகிரி, வலங்கை மான் ஒன்றியத் தலைவர் கோவிந்தன், நீடாமங் கலம் ஒன்றியத் தலைவர் கோ.கணேசன், பேராவூ ரணி நகரத் தலைவர் இரா.நீலகண்டன், மன்னை நகரத் தலைவர் ஆர்.எஸ்.அன்பழகன், அம்மாப்பேட்டை ஒன்றியத் தலைவர் வை. தேசபந்து, ஒன்றிய செய லாளர் ஜவகர், வன் னிப்பட்டு தமிழ்ச்செல் வன், சேதுபாவாசத்திர ஒன்றிய செயலாளர் சத் தியமூர்த்தி, பட்டுக் கோட்டை நகரத் தலை வர் சின்னக்கண்ணு, தஞ்சை நகர இளை ஞரணி செயலாளர் மா.இராசஇராசன், தஞ்சை நகர இளை ஞரணி இரா.வெற்றிக் குமார், மாவட்ட மக ளிரணி தலைவர் பாக் கியம், திருச்சி நகரத் தலைவர் ஆசிரியர் நற் குணம், தஞ்சை நகர இளைஞரணி துணைத் தலைவர் அ.பெரியார் செல்வன், உரத்தநாடு ஒன்றிய இளைஞரணி தலைவர் நா.பிரபு, தஞ்சை ஒன்றிய இளை ஞரணி தலைவர் பெட் டிக்கடை தனபால், தஞ்சை ஒன்றிய ப.க. அமைப்பாளர் ஆசிரியர் ராஜு உள்ளிட்ட ஏராள மான கழக தோழர் களும், பொது மக்களும் பங்கேற்று சிறப்பித்தனர்.
தொடக்கத்தில் விடுதலையில் தமிழர் தலைவர் அவர்களின் 50 ஆண்டுகள் ஆசிரியர் பணியினை பாராட்டி  விடுதலையில் வெளிவந்த தலையங்கத்தைப் இந்துமதி பெரியார் செல்வன் அவர்கள் படித்தார்கள். தொடக்கத்தில் குடந்தை ஜெய மணி குமார் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி நடத்தினார்.

Thursday 9 August 2012

செயங்கொண்டத்தில் ஜெயசூர்யா மருந்தக திறப்பு விழா


பெரியார் கொள்கையை திரைத்துறையில் கொண்டு செல்வேன்!


செயங்கொண்டத்தில் தேசிய விருது பெற்ற நடிகர் அப்புகுட்டி பேச்சு
செயங்கொண்டத்தில் ஜெயசூர்யா மருந்தக திறப்பு விழாவில் கழக துணைப்பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன், நடிகர் அப்புக்குட்டி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். (1.8.2012)
செயங்கொண்டம்,ஆக.6-செயங்கொண்டம் தந்தைபெரியார் சிலைக்கு எதிரில்ஜெயசூர்யா மருந்தக திறப்பு விழா 1.8.2012 புதன் காலை 9 மணிக்கு மண்டல செய லாளர் சி.காமராஜ் தலை மையில், சென்னை கூத் துப்பட்டறை கண்ணன் முன்னிலையில் நடந் தது.
டாக்டர் சாந்தகுமார் வரவேற்றார். துணைப் பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் திறந்து வைத்து உரை யாற்றினார். அவர் தமது உரையில் :
டாக்டர் படிப்புக்கு சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்பது ஒரு காலம். அப்படியென்றால் பார்ப்பனர்கள் மட்டுமே டாக்டராக வேண்டும் என்ற எண்ணம் தானே காரணம். அந் நிலையைஉடைத் தெறிந்து தாழ்த்தப் பட்ட - பிற்படுத்தப் பட்ட மக்கள் டாக்ட ராக வரக்கூடிய வாய்ப் பினை ஏற்படுத்தியவர் தந்தைபெரியாரே ஆவார்.திராவிடர் இயக்கமே காரணம். ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்கு பெரியார் பட்டபாடுகள் இன்றும் தமிழர் தலைவர் கி.வீர மணி படும்பாடுகள் மிகவும் அதிகம் என்று குறிப்பிட்டார்.
அடுத்து பேசிய தேசிய விருதுபெற்ற நடிகர்அப்புகுட்டி (அழகர்சாமியின் குதிரை) தமது பேச்சில், பெரியார்கொள் கையைநேசிப்பவன் நான். காரணம் உண்மை அதில் இருப்பதால், அன்பால் எதையும் சாதிக்க முடியும் என்று போதித்த புத்தரைப் போல, அறிவால் எதை யும் சாதிக்க முடியும் என்றவர் பெரியார். மூட நம்பிக்கையை வெறுக் கத் தூண்டியவர். விழிப் புணர்ச்சி மக்களுக்கு ஏற்பட விரும்பியவர் பெரியார்.
சுயமரியாதை தன்னம்பிக்கை என்னும் பெரியாரின் முழக்கங் கள் என்னைப் பெரிதும் கவர்ந்தவிசயங்கள். இவற்றை ஒவ்வொரு மனிதனும் கடைப்பிடித் தால் வாழ்வில் வெற்றி நிச்சயம்.தந்தை பெரியார் இதைத்தான் எதிர்பார்க்கிறார். மனிதன் மூடநம்பிக் கைக்கு ஆட்படும் போது எவ்வளவு வீண்செலவு, மனித உழைப்புகள் எவ் வளவு, திருவிழாக்கள் - பண்டிகைகள் மூலம் விரயமாகும் பொருள தார பாழ் எவ்வளவு. போதாதற்கு வாழ்வில் குழப்பம்தான் மிஞ்சும். தெளிவான வாழ்க்கை வாழ வேண்டும் என் றால் பெரியார் கொள் கையே தேவை.
தன்மனதில் பட்டதை, உண்மையை இவ்வளவு துணிச்சலாக சொன்னவர் பெரியார் மட்டுமே. பெரியார் நமது  தலைவர் என்பதே நமக் குப் பெருமை ஆகும். என்னால் முடிந்த அளவு பெரியார் கொள் கையை திரைப்படத் துறையில் கொண்டு செல்வேன். என் தனிப் பட்ட சந்திப்புகளிலும், பேச்சிலும் பெரியாரை சொல்லாமல் இருக்க மாட்டேன்.
முதலில் எனக்கு புத்தரை பிடிக்கும். புத்தரை தெரிந்ததால்தான் பெரியாரைப் பற்றியும் படிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டேன். தேடல்மூலமாக தெரிந்துகொண்டேன்.
மனவலிமை ஏற் படாமல் செய்வதே மூடநம்பிக்கை. மன வலிமை தேவையெனில் மூடநம்பிக்கை ஒழிக்கப் படவேண்டும். மனிதன் மனிதனை சுரண்டும், அடிமைப்படுத்தும் நிலை மாற வேண்டும் என்ற பெரியார் கொள்கை வென்றே தீரும். மாற்றம் நடந்தே தீரும் என்று குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் இரா.நீலமே கன், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் சின் னப்பன், தா.பழூர் ஒன் றிய தி.மு.க. செயலாளர் க.சொ.க.கண்ணன், செயங்கொண்டம் நகர தி.மு.க. செயலாளர் வெ. கருணாநிதி, அ.தி.மு.க தவசீலன், மாவட்ட தி.க. துணைத் தலைவர் இரா. திலீபன் மற்றும் வர்த்தக பிரமுகர்கள் பங்கேற் றனர். முடிவில் தவசீலன் நன்றி கூறினார்.

Sunday 5 August 2012

கீழமாளிகை மு.அறிவுச்செல்வன் - மா.செல்வராணி இணையேற்பு விழா



கழகப் பொதுச் செயலாளர் கலி.பூங்குன்றன் நடத்தி வைத்தார்

செந்துறை, ஜூலை 18- அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் அ.முருகேசன் - ராஜகுமாரி ஆகியோர் மகன் மு.அறிவுச்செல்வன், சோழன்குடிக்காடு பாண்டியன் - அம்சாதேவி ஆகியோரது மகள் பா.செல்வராணி ஆகியோரின் இணையேற்பு விழா 15.7.2012 ஞாயிறு காலை 9 மணி யளவில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வருகைதந்த அனைவரையும் வஞ்சனிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் க.தனபால் வரவேற்றார். திருச்சி மண்டல செயலாளர் சி.காமராஜ், அரியலூர் மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன், மாவட்ட செயலாளர் க.சிந்தனைச்செல்வன், தி.மு.க. சொற்பொழிவாளர் ச.அ.பெருநற்கிள்ளி, தி.மு.க. ஒன்றிய செயலாளர் மு.ஞானமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் பூ.செல்வராஜ், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் நா.கிருஷ்ணமூர்த்தி, தேவனூர் ஊராட்சி மன்றத் தலைவர் கு.செல்வராசு ஆகியோர் வாழ்த்துரை வழங்கிய பின்னர் கழக பொதுச் செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் மணமக்களை உறுதிமொழி கூறச் செய்து மணவிழாவை நடத்தி வைத்தார்.
அவர் தனது வாழ்த்துரையில், சுயமரியாதைத் திருமண மேடை என்பது ஒரு கொள்கை மேடை. இந்த மேடையில் பெரியார் எடுத்துக்கூறிய பெண் கல்வி, பெண்களுக்கு சொத்துரிமை, குழந்தை மணம் கூடாது என்ற கருத்துகள்தான் அரசாங்கத்தின் சட்டங்களாயின என்றும் பொதுஉடைமை பேசுகின்ற, விஞ்ஞானப்பூர்வமான நாத்திகம் பேசுகின்றவர்களால் கூட பார்ப்பனர்களை விலக்கி இல்ல நிகழ்ச்சிகளை நடத்திட இயலவில்லை. தமிழ்நாட்டில் அத்தகைய புரட்சியை ஏற்படுத்தியவர் பெரியார் என எடுத் துக்கூறி வாழ்வியல் உரையாற்றினார்.
ஒன்றிய அமைப்பாளர் முத்தமிழ்ச் செல்வன் நன்றி கூறினார். மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் தங்க. சிவமூர்த்தி நிகழ்ச்சியை ஒருங்கிணைத் தார்.
நிகழ்ச்சியில் மண்டல இ.அ. செயலாளர் மு.ராசா, மாவட்ட ப.க. அமைப்பாளர் ஆசிரியர் இளங்கோவன், கீழ மாளிகை ஊ.ம.தலைவர் இரா.அன்புச்செல்வன், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் சாமிநாதன், மாவட்ட இளைஞரணி தலைவர் பொன்.செந்தில்குமார், பொதுக்குழு உறுப்பினர் சு.மணிவண்ணன், மாவட்ட இ.அ.து.செயலாளர் வெ.இளவரசன், அரியலூர் ஒன்றிய தலைவர் சி.சிவக்கொழுந்து, செயலாளர் ந.செல்லமுத்து, செ.ஏழுமலை, ஜே.பி.ஆசைத்தம்பி, செந்துறை ஒன்றிய செயலாளர் சேகர் உள்ளிட்ட தோழர்களும் உறவினர்களும் சிறப்பாக பங்கேற்றனர்.

தா.பழூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கழக துணைப்பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் உரையாற்றினா


.
தா.பழூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கழக துணைப்பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் உரையாற்றினார். (21.7.2012)
தா.பழூர், ஜுலை 25-அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றிய திராவிடர் கழகத்தின் சார்பில் திராவிடத்தால் வாழ்கிறோம் என்ற மாபெரும் கழக பொதுக் கூட்டம் 21.7.2012 சனிக்கிழமை மாலை 6மணியளவில் தொடங்கி சிறப் பாக நடைபெற்றது ஒன்றிய தலைவர் மகாலிங்கம் தலைமை யேற்க, ஒன்றிய செய லாளர் பி.வெங்கடாசலம் வரவேற்புரையாற்றினார். மாவட்ட தலை வர் விடுதலை நீலமேகன், மண்டல செயலாளர் சி.காமராஜ், முன்னிலை வகிக்க மாவட்ட செய லாளர் க.சிந்தனைச் செல்வன், தொடக்கவு ரையாற்றிய பின்னர் திராவிடர்கழக துணைப் பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் திராவிட இயக்க முன் னோடிகள் குறித்தும் கடவுள் மத கற்ப னைகளால் மடமைக்கு ஆளாக்கப்பட்ட தமிழ் சமூகத்தை திராவிட இயக்கம் மீட்டெடுத்து வருவதுகுறித்தும் விளக்கி சிறப்புரையாற் றினார்.
முன்னதாக கழக பாடகர் ஒன்றிய து.தலைவர் இராமச்சந்திரன் கழகப் பாடல் களை பாடினார். உத்திரக்குடி கலைவாணன் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சியை நடத்தி மக்களை கவர்ந்தார். ஒன்றிய அமைப்பாளர் சி.தமிழ்சேகரன் நன்றி கூறினார்.
பங்கேற்றோர் : மண் டல இளைஞரணி செயலாளர் மு.ராசா, பொதுக் குழு உறுப்பினர்கள் கே. பி.கலியமூர்த்தி, சு.மணிவண்ணன், மாவட்ட து.தலைவர் இரா.திலீபன், மாவட்ட து.செயலாளர்இரத்தின. இராமச்சந்திரன், மாவட்ட ப.க. தலைவர் பு.கா.அன்பழகன், மாவட்டஇ.அ.தலைவர் பொன்.செந்தில்குமார்,செயங்கொண்டம் ஒன்றிய தலைவர் வை.செல்வராஜ், தா.பழூர் ஒன்றிய ப.க.அமைப்பாளர் ஆசிரியர் இராசேந்திரன்,கோடம்குடி இரவி, உத்திரக்குடி ஆ.செயராமன் ஆண்டி மடம் ஒன்றிய தலைவர் இரா.தமிழரசன், ஒன்றிய இ.அ.செயலாளர் க.செந்தில், செந்துறை ஒன்றிய செயலாளர் சேகர், அமைப்பாளர் முத்தமிழ்ச்செல்வன், சிற்றரசு உள்ளிட்ட தோழர்களும் திரளான பொதுமக்களும் சிறப்பாக பங்கேற்றனர்.
இயக்கத்தில் இணைந்த இளைஞர்கள் தேவாமங்கலம் முத்து, அ.மின்னல் கண்ணன், ஜோதிபாசு, மாசிலாமணி, அமிர்தராயன்கோட்டை சுரேஷ் உள்ளிட்ட தோழர்கள் துணைப்பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன் முன்னிலையில் இயக்கத்தில் இணைந் தனர். முன்னதாக தந்தை பெரியார்,அறிஞர் அண்ணா,மக்கள் தொண்டர் க.சொ.கணேசன் ஆகியோரின் சிலைக்கு மாவட்ட செயலாளர் க.சிந்தனைச்செல்வன்  தலைமையில் தோழர்கள் மாலை அணிவித்தனர்.


பெரியார் வீரவிளையாட்டுக் கழக மாவட்டக்குழு பொறுப்பாளர்கள்


அரியலூர் மாவட்டம்
புரவலர்கள்: விடுதலை நீலமேகம், க.சிந்தனைச்செல்வன், ஆசிரியர் தங்க.சிவமூர்த்தி, பொறியாளர் கோவிந்தராஜன், ஆசிரியர் கொளஞ்சியப்பன்.
தலைவர்: செந்துறை சேகர் - செந்துறை, செயலாளர்: இளவழகன்- நத்தையன்குடிகாடு, அமைப்பாளர் : மதியழகன்-அரியலூர், துணைத்தலைவர் : சு. பார்த்தீபன் -அன்னிமங்களம்,துணைச்செயலாளர்:
ச. இராசேசுகண்ணன்-நாயக்கர்பாளையம்.

உடையார்பாளையம் கழக கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்



இளைஞரணி சார்பில் நடைபெற்ற கொள்கை விளக்கப் பொதுக்கூட்டத்தில் துரை.சந்திரசேகரன் உரையாற்றினார்.
உடையார்பாளையம், ஆக.2-அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் கடை வீதியில் 30.7.2012 மாலை 6மணியளவில் கழக இளைஞரணி சார்பில் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு திருச்சி மண்டல இளைஞரணி செயலாளர் வழக்குரைஞர் மு.இராசா தலைமை வகித்து உரையாற்றினார். மாவட்ட இளைஞரணி தலைவர் பொன். செந்தில்குமார் வரவேற்புரையாற்றினார். மாவட்ட துணைத் தலைவர் இரா.திலீபன், மாவட்ட ப.க அமைப்பாளர், இரா.இளங்கோவன், மாவட்ட து.செயலாளர் இரத்தின. இராமச்சந்திரன், பொதுக் குழு உறுப்பினர் கே.பி. கலியமூர்த்தி, ஒன்றிய தலைவர் வை.செல்வராசு, மாவட்ட இளைஞரணி செயலாளர் கார்த் திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலாளர் க.சிந்தனைச்செல்வன், மாவட்ட தலைவர் நீலமேகம், மண்டல செயலாளர் சி.காமராஜ் ஆகியோர் உரையாற்றிய பின்னர் தி.மு.க. தலைமை நிலைய பேச்சாளர் ச. அ.பெருநற்கிள்ளி, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தமிழர் தலைவர், கலைஞர் ஆகியோரின் உழைப்பால் தான் நாம் மனிதனாக வாழ்கின்றோம் என்றும் திராவிடர் இயக்கத்தின் மூலம் நாம் எழுச்சி பெற்றதையும், தனது உரையில் விரிவாக எடுத்துரைத்தார்.
இறுதியாக திராவிடர் கழக துணைப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் பேசுகையில்: மாவீரன் உடையார் பாளையம் வேலாயுதம் அவர்களின் தொண்டு, தியாகத்தையும் தந்தை பெரியாரின் தத்துவங்களை எவ்வாறெல்லாம் அவர் எதிர்ப்புகளுக்கிடையே தூக்கிப்பிடித்தார் என்றும் அவர் விட்டுச்சென்ற பணியை இன்றைய இளைய தலைமுறையினர் தமிழர் தலைவர் தலைமையில் பணியாற்ற முன் வரவேண்டும். தந்தை பெரியாரின் உழைப்பினால்தான் இன்றைக்கு தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் பட்டம் பெற முடிந்தது. பல்வேறு உயர் பதவிகளுக்கு வரமுடிந்தது. கடவுள் ஜாதி, மத மூடநம்பிக்கைகளையும் சாமியார்கள், ஜோதிடர்களின் பித்தலாட்டங்களையும் விளக்கி அரியதொரு விளக்கவுரையை ஆற்றினார்.
உடையார்பாளையம் வேலாயுதத்திற்கு சிலை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்தனர். அவர்களின் கோரிக்கை தமிழர் தலைவரிடம் தெரிவிக்கப்படும் என்று தனது உரையில் தெரிவித்தார். கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக உத்திரக்குடி கலைவாணன் அவர்களின் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சியினை ஏராளமாக செய்து காட்டி சாமியார்களின் மோசடியை விளக்கினார்.
நிகழ்ச்சியில் செந்துறை ஒன்றிய அமைப்பாளர் மு.தமிழ்ச்செல்வன் தா.பழூர் ஒன்றிய துணை தலைவர் இர. இராமச்சந்திரன், கோடங்குடி இரவி, செந்துறை  ஒ.இ.அ. அமைப்பாளர் பரணம் இராமதாஸ், இளைஞரணி தோழர்கள் முத்து, க.செந்தில் வாரியங்காவல் செ.தமிழசரன், அ.அன்பரசன், பாலசுப்பிரமணியன் மற்றும் நகர அமைப்பாளர் துரை.பிரபாகரன், தா.பழூர் ஒன்றிய செயலாளர் பி.வெங்கடாசலம், ஆண்டிமடம் ஒன்றிய தலைவர் இரா.தமிழசரன், ஆசிரியர் இரா.இராசேந்திரன், உல்லியக்குடி சிற்றரசு வடசென்னை மாவட்ட இளைஞரணி செயலாளர் வை.கலையரசன் உள்ளிட்ட தோழர்கள் கலந்துகொண்டனர். இறுதியாக இளைஞரணி துணை செயலாளர் வெ.இளவரசன் நன்றி கூறினார்.