Friday 7 September 2012

வருமானத்தைப் பற்றி கவலைப்படாமல் தொண்டு செய்பவர்கள் தி.க. தோழர்கள் இணை ஏற்பு விழாவை தமிழர் தலைவர் நடத்தி வைத்து விளக்கவுரை


வை.கலையரசன் - உ.கனிமொழி ஆகியோரது இணை ஏற்பு விழாவினை தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் நடத்தி வைத்தார். உடன் குன்னம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.சிவசங்கர் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் உள்ளனர்.
அரியலூர், செப். 2- அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், உல்லியக்குடி பெ.வைத்தியலிங்கம் - தங்கம் ஆகியோரது மகனும் வடசென்னை மாவட்ட இளைஞரணி செயலாளருமாகிய வை.கலையரசன், சோழன்குறிச்சி உத்ராபதி - தனம் ஆகியோரின் மகள் உ.கனிமொழி ஆகியோரது வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழா உல்லியக்குடி சமுதாயக்கூடத்தில் 31.8.2012 வெள்ளி காலை 10.30 மணியளவில் தொடங்கி சிறப்பாக நடைபெற்றது.
திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் பெரியார் திடலில் பணியாற்றும் வை.கலையரசன் திடலின் செல்லப்பிள்ளை என்றும், சுயமரியாதை வீரர்கள் உடையார்பாளையம் வேலாயுதம், உல்லியக்குடி அரங்கசாமி ஆகியோரை நினைவு கூர்ந்து வரவேற்புரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன், மண்டல செயலாளர் சி.காமராஜ், சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் திருமகள் இறையன், கழக அமைப்பு செயலாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், ஒன்றிய குழு உறுப்பினர் அன்பழகன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் கா.சொ.க.கண்ணன், பெருநற்கிள்ளி, தி.மு.க. மாவட்ட செயலாளரும், குன்னம் சட்டபேரவை உறுப்பினருமான எஸ்.எஸ்.சிவசங்கர் ஆகியோரின் வாழ்த்துரைக்கு பின்னர் தமிழர் தலைவர் வாழ்வியல் உரையாற்றி வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவை நடத்தி வைத்தார்.
தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தனது உரையில், சின்னஞ்சிறிய கிராமமான இந்த உல்லியக்குடிக்கு தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் உட்பட பலமுறை நானும் வருகை புரிந்துள்ளேன். சுயமரியாதை வீரர் அரங்கசாமி பலமுறை எங்களை அழைத்துள்ளார். இந்த ஊர் மட்டுமல்ல அரியலூர் மாவட்டமே சுயமரியாதைப் பயிர் செழித்த பூமி.
தந்தை பெரியார் கட்டளையை ஏற்று ஜாதி ஒழிப்புப் போராட்டம் மற்றும் பல்வேறு போராட்டங்களில் ஏராளமாக சிறை சென்றவர்களின் மண் இந்த மண் என்று நினைவு கூர்ந்தார். பேராசிரியர் இறையனால் அறிமுகப்படுத்தப்பட்டு மு.நீ.சிவராசனால் வளர்க்கப் பட்ட நல்ல தொண்டு செய்யக்கூடிய தோழர் கலையரசன், குடிஅரசு தொகுப்பிலே அவரது பணி பாராட்டுக்குரியது என்றும், தந்தை பெரியாரால் பெண்கள் பெற்ற உரிமைகள் திருமண மந்திரங்களின் பொருளையும் எடுத்துக்கூறி வாழ்வியல் உரையாற்றினார். நிகழ்ச்சியை மாவட்ட செயலாளர் க.சிந்தனைச் செல்வன் ஒருங்கிணைத்தார். உல்லியக் குடி சிற்றரசு நன்றி கூறினார்.
அரியலூர் மாவட்ட துணைச் செயலாளர் இரத்தின.இராமச்சந்திரன், மண்டல இளைஞரணி செயலாளர் மு.ராசா, மாவட்ட இளைஞரணி தலைவர் பொன்.செந்தில்குமார், மாவட்ட இளைஞ ரணி செயலாளர் க.கார்த்திகேயன், மாவட்ட ப.க. தலைவர் பு.கா.அன்பழகன், மாவட்ட ப.க. செயலா ளர் தங்க.சிவமூர்த்தி, ஒன்றிய பொறுப்பாளர்கள் சொ.மகாலிங்கம், பி.வெங்கடாசலம், சி.தமிழ்சேகரன், செயங்கொண்டம் ஒன்றிய செயலாளர் மா. கருணாநிதி, செந்துறை ஒன்றிய தலைவர் மா.சங்கர், செயலாளர் சேகர்,
அமைப்பாளர் முத்தமிழ்ச் செல்வன், அரியலூர் ஒன்றிய தலைவர் சி.சிவக் கொழுந்து, செயலாளர் ந.செல்லமுத்து, அமைப்பாளர் கோவிந்தராஜ், செங்கமலம் பொதுக்குழு உறுப்பினர் மு.சிங்காரம், சுப்புராயன், வஞ்சினபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் க.தனபால், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் வெ.இளவரசன், தஞ்சை இளவரசன், மாநில ப.க. செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், இறைவி, மாட்சி, பண் பொளி, இசையின்பன், செங்குட்டுவன்,
சைதை செல் வம், மதியழகன், கலைமணி, விஜய், மணியம்மை, மரகதமணி, பார்த்தீபன், தமிழ்மைந்தன், ஜோதி ராமலிங்கம், கடலூர் கா.எழிலரசன் உள்ளிட்ட ஏராளமான தோழர்களும் உறவினர்களும் சிறப்பாக பங்கேற்றனர். முன்னதாக வி.கை.காட்டியில் தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

No comments:

Post a Comment