Sunday 5 August 2012

உடையார்பாளையம் கழக கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்



இளைஞரணி சார்பில் நடைபெற்ற கொள்கை விளக்கப் பொதுக்கூட்டத்தில் துரை.சந்திரசேகரன் உரையாற்றினார்.
உடையார்பாளையம், ஆக.2-அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் கடை வீதியில் 30.7.2012 மாலை 6மணியளவில் கழக இளைஞரணி சார்பில் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு திருச்சி மண்டல இளைஞரணி செயலாளர் வழக்குரைஞர் மு.இராசா தலைமை வகித்து உரையாற்றினார். மாவட்ட இளைஞரணி தலைவர் பொன். செந்தில்குமார் வரவேற்புரையாற்றினார். மாவட்ட துணைத் தலைவர் இரா.திலீபன், மாவட்ட ப.க அமைப்பாளர், இரா.இளங்கோவன், மாவட்ட து.செயலாளர் இரத்தின. இராமச்சந்திரன், பொதுக் குழு உறுப்பினர் கே.பி. கலியமூர்த்தி, ஒன்றிய தலைவர் வை.செல்வராசு, மாவட்ட இளைஞரணி செயலாளர் கார்த் திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலாளர் க.சிந்தனைச்செல்வன், மாவட்ட தலைவர் நீலமேகம், மண்டல செயலாளர் சி.காமராஜ் ஆகியோர் உரையாற்றிய பின்னர் தி.மு.க. தலைமை நிலைய பேச்சாளர் ச. அ.பெருநற்கிள்ளி, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தமிழர் தலைவர், கலைஞர் ஆகியோரின் உழைப்பால் தான் நாம் மனிதனாக வாழ்கின்றோம் என்றும் திராவிடர் இயக்கத்தின் மூலம் நாம் எழுச்சி பெற்றதையும், தனது உரையில் விரிவாக எடுத்துரைத்தார்.
இறுதியாக திராவிடர் கழக துணைப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் பேசுகையில்: மாவீரன் உடையார் பாளையம் வேலாயுதம் அவர்களின் தொண்டு, தியாகத்தையும் தந்தை பெரியாரின் தத்துவங்களை எவ்வாறெல்லாம் அவர் எதிர்ப்புகளுக்கிடையே தூக்கிப்பிடித்தார் என்றும் அவர் விட்டுச்சென்ற பணியை இன்றைய இளைய தலைமுறையினர் தமிழர் தலைவர் தலைமையில் பணியாற்ற முன் வரவேண்டும். தந்தை பெரியாரின் உழைப்பினால்தான் இன்றைக்கு தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் பட்டம் பெற முடிந்தது. பல்வேறு உயர் பதவிகளுக்கு வரமுடிந்தது. கடவுள் ஜாதி, மத மூடநம்பிக்கைகளையும் சாமியார்கள், ஜோதிடர்களின் பித்தலாட்டங்களையும் விளக்கி அரியதொரு விளக்கவுரையை ஆற்றினார்.
உடையார்பாளையம் வேலாயுதத்திற்கு சிலை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்தனர். அவர்களின் கோரிக்கை தமிழர் தலைவரிடம் தெரிவிக்கப்படும் என்று தனது உரையில் தெரிவித்தார். கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக உத்திரக்குடி கலைவாணன் அவர்களின் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சியினை ஏராளமாக செய்து காட்டி சாமியார்களின் மோசடியை விளக்கினார்.
நிகழ்ச்சியில் செந்துறை ஒன்றிய அமைப்பாளர் மு.தமிழ்ச்செல்வன் தா.பழூர் ஒன்றிய துணை தலைவர் இர. இராமச்சந்திரன், கோடங்குடி இரவி, செந்துறை  ஒ.இ.அ. அமைப்பாளர் பரணம் இராமதாஸ், இளைஞரணி தோழர்கள் முத்து, க.செந்தில் வாரியங்காவல் செ.தமிழசரன், அ.அன்பரசன், பாலசுப்பிரமணியன் மற்றும் நகர அமைப்பாளர் துரை.பிரபாகரன், தா.பழூர் ஒன்றிய செயலாளர் பி.வெங்கடாசலம், ஆண்டிமடம் ஒன்றிய தலைவர் இரா.தமிழசரன், ஆசிரியர் இரா.இராசேந்திரன், உல்லியக்குடி சிற்றரசு வடசென்னை மாவட்ட இளைஞரணி செயலாளர் வை.கலையரசன் உள்ளிட்ட தோழர்கள் கலந்துகொண்டனர். இறுதியாக இளைஞரணி துணை செயலாளர் வெ.இளவரசன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment