Thursday 9 August 2012

செயங்கொண்டத்தில் ஜெயசூர்யா மருந்தக திறப்பு விழா


பெரியார் கொள்கையை திரைத்துறையில் கொண்டு செல்வேன்!


செயங்கொண்டத்தில் தேசிய விருது பெற்ற நடிகர் அப்புகுட்டி பேச்சு
செயங்கொண்டத்தில் ஜெயசூர்யா மருந்தக திறப்பு விழாவில் கழக துணைப்பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன், நடிகர் அப்புக்குட்டி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். (1.8.2012)
செயங்கொண்டம்,ஆக.6-செயங்கொண்டம் தந்தைபெரியார் சிலைக்கு எதிரில்ஜெயசூர்யா மருந்தக திறப்பு விழா 1.8.2012 புதன் காலை 9 மணிக்கு மண்டல செய லாளர் சி.காமராஜ் தலை மையில், சென்னை கூத் துப்பட்டறை கண்ணன் முன்னிலையில் நடந் தது.
டாக்டர் சாந்தகுமார் வரவேற்றார். துணைப் பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் திறந்து வைத்து உரை யாற்றினார். அவர் தமது உரையில் :
டாக்டர் படிப்புக்கு சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்பது ஒரு காலம். அப்படியென்றால் பார்ப்பனர்கள் மட்டுமே டாக்டராக வேண்டும் என்ற எண்ணம் தானே காரணம். அந் நிலையைஉடைத் தெறிந்து தாழ்த்தப் பட்ட - பிற்படுத்தப் பட்ட மக்கள் டாக்ட ராக வரக்கூடிய வாய்ப் பினை ஏற்படுத்தியவர் தந்தைபெரியாரே ஆவார்.திராவிடர் இயக்கமே காரணம். ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்கு பெரியார் பட்டபாடுகள் இன்றும் தமிழர் தலைவர் கி.வீர மணி படும்பாடுகள் மிகவும் அதிகம் என்று குறிப்பிட்டார்.
அடுத்து பேசிய தேசிய விருதுபெற்ற நடிகர்அப்புகுட்டி (அழகர்சாமியின் குதிரை) தமது பேச்சில், பெரியார்கொள் கையைநேசிப்பவன் நான். காரணம் உண்மை அதில் இருப்பதால், அன்பால் எதையும் சாதிக்க முடியும் என்று போதித்த புத்தரைப் போல, அறிவால் எதை யும் சாதிக்க முடியும் என்றவர் பெரியார். மூட நம்பிக்கையை வெறுக் கத் தூண்டியவர். விழிப் புணர்ச்சி மக்களுக்கு ஏற்பட விரும்பியவர் பெரியார்.
சுயமரியாதை தன்னம்பிக்கை என்னும் பெரியாரின் முழக்கங் கள் என்னைப் பெரிதும் கவர்ந்தவிசயங்கள். இவற்றை ஒவ்வொரு மனிதனும் கடைப்பிடித் தால் வாழ்வில் வெற்றி நிச்சயம்.தந்தை பெரியார் இதைத்தான் எதிர்பார்க்கிறார். மனிதன் மூடநம்பிக் கைக்கு ஆட்படும் போது எவ்வளவு வீண்செலவு, மனித உழைப்புகள் எவ் வளவு, திருவிழாக்கள் - பண்டிகைகள் மூலம் விரயமாகும் பொருள தார பாழ் எவ்வளவு. போதாதற்கு வாழ்வில் குழப்பம்தான் மிஞ்சும். தெளிவான வாழ்க்கை வாழ வேண்டும் என் றால் பெரியார் கொள் கையே தேவை.
தன்மனதில் பட்டதை, உண்மையை இவ்வளவு துணிச்சலாக சொன்னவர் பெரியார் மட்டுமே. பெரியார் நமது  தலைவர் என்பதே நமக் குப் பெருமை ஆகும். என்னால் முடிந்த அளவு பெரியார் கொள் கையை திரைப்படத் துறையில் கொண்டு செல்வேன். என் தனிப் பட்ட சந்திப்புகளிலும், பேச்சிலும் பெரியாரை சொல்லாமல் இருக்க மாட்டேன்.
முதலில் எனக்கு புத்தரை பிடிக்கும். புத்தரை தெரிந்ததால்தான் பெரியாரைப் பற்றியும் படிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டேன். தேடல்மூலமாக தெரிந்துகொண்டேன்.
மனவலிமை ஏற் படாமல் செய்வதே மூடநம்பிக்கை. மன வலிமை தேவையெனில் மூடநம்பிக்கை ஒழிக்கப் படவேண்டும். மனிதன் மனிதனை சுரண்டும், அடிமைப்படுத்தும் நிலை மாற வேண்டும் என்ற பெரியார் கொள்கை வென்றே தீரும். மாற்றம் நடந்தே தீரும் என்று குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் இரா.நீலமே கன், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் சின் னப்பன், தா.பழூர் ஒன் றிய தி.மு.க. செயலாளர் க.சொ.க.கண்ணன், செயங்கொண்டம் நகர தி.மு.க. செயலாளர் வெ. கருணாநிதி, அ.தி.மு.க தவசீலன், மாவட்ட தி.க. துணைத் தலைவர் இரா. திலீபன் மற்றும் வர்த்தக பிரமுகர்கள் பங்கேற் றனர். முடிவில் தவசீலன் நன்றி கூறினார்.

Sunday 5 August 2012

கீழமாளிகை மு.அறிவுச்செல்வன் - மா.செல்வராணி இணையேற்பு விழா



கழகப் பொதுச் செயலாளர் கலி.பூங்குன்றன் நடத்தி வைத்தார்

செந்துறை, ஜூலை 18- அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் அ.முருகேசன் - ராஜகுமாரி ஆகியோர் மகன் மு.அறிவுச்செல்வன், சோழன்குடிக்காடு பாண்டியன் - அம்சாதேவி ஆகியோரது மகள் பா.செல்வராணி ஆகியோரின் இணையேற்பு விழா 15.7.2012 ஞாயிறு காலை 9 மணி யளவில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வருகைதந்த அனைவரையும் வஞ்சனிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் க.தனபால் வரவேற்றார். திருச்சி மண்டல செயலாளர் சி.காமராஜ், அரியலூர் மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன், மாவட்ட செயலாளர் க.சிந்தனைச்செல்வன், தி.மு.க. சொற்பொழிவாளர் ச.அ.பெருநற்கிள்ளி, தி.மு.க. ஒன்றிய செயலாளர் மு.ஞானமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் பூ.செல்வராஜ், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் நா.கிருஷ்ணமூர்த்தி, தேவனூர் ஊராட்சி மன்றத் தலைவர் கு.செல்வராசு ஆகியோர் வாழ்த்துரை வழங்கிய பின்னர் கழக பொதுச் செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் மணமக்களை உறுதிமொழி கூறச் செய்து மணவிழாவை நடத்தி வைத்தார்.
அவர் தனது வாழ்த்துரையில், சுயமரியாதைத் திருமண மேடை என்பது ஒரு கொள்கை மேடை. இந்த மேடையில் பெரியார் எடுத்துக்கூறிய பெண் கல்வி, பெண்களுக்கு சொத்துரிமை, குழந்தை மணம் கூடாது என்ற கருத்துகள்தான் அரசாங்கத்தின் சட்டங்களாயின என்றும் பொதுஉடைமை பேசுகின்ற, விஞ்ஞானப்பூர்வமான நாத்திகம் பேசுகின்றவர்களால் கூட பார்ப்பனர்களை விலக்கி இல்ல நிகழ்ச்சிகளை நடத்திட இயலவில்லை. தமிழ்நாட்டில் அத்தகைய புரட்சியை ஏற்படுத்தியவர் பெரியார் என எடுத் துக்கூறி வாழ்வியல் உரையாற்றினார்.
ஒன்றிய அமைப்பாளர் முத்தமிழ்ச் செல்வன் நன்றி கூறினார். மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் தங்க. சிவமூர்த்தி நிகழ்ச்சியை ஒருங்கிணைத் தார்.
நிகழ்ச்சியில் மண்டல இ.அ. செயலாளர் மு.ராசா, மாவட்ட ப.க. அமைப்பாளர் ஆசிரியர் இளங்கோவன், கீழ மாளிகை ஊ.ம.தலைவர் இரா.அன்புச்செல்வன், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் சாமிநாதன், மாவட்ட இளைஞரணி தலைவர் பொன்.செந்தில்குமார், பொதுக்குழு உறுப்பினர் சு.மணிவண்ணன், மாவட்ட இ.அ.து.செயலாளர் வெ.இளவரசன், அரியலூர் ஒன்றிய தலைவர் சி.சிவக்கொழுந்து, செயலாளர் ந.செல்லமுத்து, செ.ஏழுமலை, ஜே.பி.ஆசைத்தம்பி, செந்துறை ஒன்றிய செயலாளர் சேகர் உள்ளிட்ட தோழர்களும் உறவினர்களும் சிறப்பாக பங்கேற்றனர்.

தா.பழூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கழக துணைப்பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் உரையாற்றினா


.
தா.பழூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கழக துணைப்பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் உரையாற்றினார். (21.7.2012)
தா.பழூர், ஜுலை 25-அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றிய திராவிடர் கழகத்தின் சார்பில் திராவிடத்தால் வாழ்கிறோம் என்ற மாபெரும் கழக பொதுக் கூட்டம் 21.7.2012 சனிக்கிழமை மாலை 6மணியளவில் தொடங்கி சிறப் பாக நடைபெற்றது ஒன்றிய தலைவர் மகாலிங்கம் தலைமை யேற்க, ஒன்றிய செய லாளர் பி.வெங்கடாசலம் வரவேற்புரையாற்றினார். மாவட்ட தலை வர் விடுதலை நீலமேகன், மண்டல செயலாளர் சி.காமராஜ், முன்னிலை வகிக்க மாவட்ட செய லாளர் க.சிந்தனைச் செல்வன், தொடக்கவு ரையாற்றிய பின்னர் திராவிடர்கழக துணைப் பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் திராவிட இயக்க முன் னோடிகள் குறித்தும் கடவுள் மத கற்ப னைகளால் மடமைக்கு ஆளாக்கப்பட்ட தமிழ் சமூகத்தை திராவிட இயக்கம் மீட்டெடுத்து வருவதுகுறித்தும் விளக்கி சிறப்புரையாற் றினார்.
முன்னதாக கழக பாடகர் ஒன்றிய து.தலைவர் இராமச்சந்திரன் கழகப் பாடல் களை பாடினார். உத்திரக்குடி கலைவாணன் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சியை நடத்தி மக்களை கவர்ந்தார். ஒன்றிய அமைப்பாளர் சி.தமிழ்சேகரன் நன்றி கூறினார்.
பங்கேற்றோர் : மண் டல இளைஞரணி செயலாளர் மு.ராசா, பொதுக் குழு உறுப்பினர்கள் கே. பி.கலியமூர்த்தி, சு.மணிவண்ணன், மாவட்ட து.தலைவர் இரா.திலீபன், மாவட்ட து.செயலாளர்இரத்தின. இராமச்சந்திரன், மாவட்ட ப.க. தலைவர் பு.கா.அன்பழகன், மாவட்டஇ.அ.தலைவர் பொன்.செந்தில்குமார்,செயங்கொண்டம் ஒன்றிய தலைவர் வை.செல்வராஜ், தா.பழூர் ஒன்றிய ப.க.அமைப்பாளர் ஆசிரியர் இராசேந்திரன்,கோடம்குடி இரவி, உத்திரக்குடி ஆ.செயராமன் ஆண்டி மடம் ஒன்றிய தலைவர் இரா.தமிழரசன், ஒன்றிய இ.அ.செயலாளர் க.செந்தில், செந்துறை ஒன்றிய செயலாளர் சேகர், அமைப்பாளர் முத்தமிழ்ச்செல்வன், சிற்றரசு உள்ளிட்ட தோழர்களும் திரளான பொதுமக்களும் சிறப்பாக பங்கேற்றனர்.
இயக்கத்தில் இணைந்த இளைஞர்கள் தேவாமங்கலம் முத்து, அ.மின்னல் கண்ணன், ஜோதிபாசு, மாசிலாமணி, அமிர்தராயன்கோட்டை சுரேஷ் உள்ளிட்ட தோழர்கள் துணைப்பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன் முன்னிலையில் இயக்கத்தில் இணைந் தனர். முன்னதாக தந்தை பெரியார்,அறிஞர் அண்ணா,மக்கள் தொண்டர் க.சொ.கணேசன் ஆகியோரின் சிலைக்கு மாவட்ட செயலாளர் க.சிந்தனைச்செல்வன்  தலைமையில் தோழர்கள் மாலை அணிவித்தனர்.


பெரியார் வீரவிளையாட்டுக் கழக மாவட்டக்குழு பொறுப்பாளர்கள்


அரியலூர் மாவட்டம்
புரவலர்கள்: விடுதலை நீலமேகம், க.சிந்தனைச்செல்வன், ஆசிரியர் தங்க.சிவமூர்த்தி, பொறியாளர் கோவிந்தராஜன், ஆசிரியர் கொளஞ்சியப்பன்.
தலைவர்: செந்துறை சேகர் - செந்துறை, செயலாளர்: இளவழகன்- நத்தையன்குடிகாடு, அமைப்பாளர் : மதியழகன்-அரியலூர், துணைத்தலைவர் : சு. பார்த்தீபன் -அன்னிமங்களம்,துணைச்செயலாளர்:
ச. இராசேசுகண்ணன்-நாயக்கர்பாளையம்.

உடையார்பாளையம் கழக கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்



இளைஞரணி சார்பில் நடைபெற்ற கொள்கை விளக்கப் பொதுக்கூட்டத்தில் துரை.சந்திரசேகரன் உரையாற்றினார்.
உடையார்பாளையம், ஆக.2-அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் கடை வீதியில் 30.7.2012 மாலை 6மணியளவில் கழக இளைஞரணி சார்பில் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு திருச்சி மண்டல இளைஞரணி செயலாளர் வழக்குரைஞர் மு.இராசா தலைமை வகித்து உரையாற்றினார். மாவட்ட இளைஞரணி தலைவர் பொன். செந்தில்குமார் வரவேற்புரையாற்றினார். மாவட்ட துணைத் தலைவர் இரா.திலீபன், மாவட்ட ப.க அமைப்பாளர், இரா.இளங்கோவன், மாவட்ட து.செயலாளர் இரத்தின. இராமச்சந்திரன், பொதுக் குழு உறுப்பினர் கே.பி. கலியமூர்த்தி, ஒன்றிய தலைவர் வை.செல்வராசு, மாவட்ட இளைஞரணி செயலாளர் கார்த் திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலாளர் க.சிந்தனைச்செல்வன், மாவட்ட தலைவர் நீலமேகம், மண்டல செயலாளர் சி.காமராஜ் ஆகியோர் உரையாற்றிய பின்னர் தி.மு.க. தலைமை நிலைய பேச்சாளர் ச. அ.பெருநற்கிள்ளி, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தமிழர் தலைவர், கலைஞர் ஆகியோரின் உழைப்பால் தான் நாம் மனிதனாக வாழ்கின்றோம் என்றும் திராவிடர் இயக்கத்தின் மூலம் நாம் எழுச்சி பெற்றதையும், தனது உரையில் விரிவாக எடுத்துரைத்தார்.
இறுதியாக திராவிடர் கழக துணைப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் பேசுகையில்: மாவீரன் உடையார் பாளையம் வேலாயுதம் அவர்களின் தொண்டு, தியாகத்தையும் தந்தை பெரியாரின் தத்துவங்களை எவ்வாறெல்லாம் அவர் எதிர்ப்புகளுக்கிடையே தூக்கிப்பிடித்தார் என்றும் அவர் விட்டுச்சென்ற பணியை இன்றைய இளைய தலைமுறையினர் தமிழர் தலைவர் தலைமையில் பணியாற்ற முன் வரவேண்டும். தந்தை பெரியாரின் உழைப்பினால்தான் இன்றைக்கு தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் பட்டம் பெற முடிந்தது. பல்வேறு உயர் பதவிகளுக்கு வரமுடிந்தது. கடவுள் ஜாதி, மத மூடநம்பிக்கைகளையும் சாமியார்கள், ஜோதிடர்களின் பித்தலாட்டங்களையும் விளக்கி அரியதொரு விளக்கவுரையை ஆற்றினார்.
உடையார்பாளையம் வேலாயுதத்திற்கு சிலை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்தனர். அவர்களின் கோரிக்கை தமிழர் தலைவரிடம் தெரிவிக்கப்படும் என்று தனது உரையில் தெரிவித்தார். கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக உத்திரக்குடி கலைவாணன் அவர்களின் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சியினை ஏராளமாக செய்து காட்டி சாமியார்களின் மோசடியை விளக்கினார்.
நிகழ்ச்சியில் செந்துறை ஒன்றிய அமைப்பாளர் மு.தமிழ்ச்செல்வன் தா.பழூர் ஒன்றிய துணை தலைவர் இர. இராமச்சந்திரன், கோடங்குடி இரவி, செந்துறை  ஒ.இ.அ. அமைப்பாளர் பரணம் இராமதாஸ், இளைஞரணி தோழர்கள் முத்து, க.செந்தில் வாரியங்காவல் செ.தமிழசரன், அ.அன்பரசன், பாலசுப்பிரமணியன் மற்றும் நகர அமைப்பாளர் துரை.பிரபாகரன், தா.பழூர் ஒன்றிய செயலாளர் பி.வெங்கடாசலம், ஆண்டிமடம் ஒன்றிய தலைவர் இரா.தமிழசரன், ஆசிரியர் இரா.இராசேந்திரன், உல்லியக்குடி சிற்றரசு வடசென்னை மாவட்ட இளைஞரணி செயலாளர் வை.கலையரசன் உள்ளிட்ட தோழர்கள் கலந்துகொண்டனர். இறுதியாக இளைஞரணி துணை செயலாளர் வெ.இளவரசன் நன்றி கூறினார்.