Thursday 9 August 2012

செயங்கொண்டத்தில் ஜெயசூர்யா மருந்தக திறப்பு விழா


பெரியார் கொள்கையை திரைத்துறையில் கொண்டு செல்வேன்!


செயங்கொண்டத்தில் தேசிய விருது பெற்ற நடிகர் அப்புகுட்டி பேச்சு
செயங்கொண்டத்தில் ஜெயசூர்யா மருந்தக திறப்பு விழாவில் கழக துணைப்பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன், நடிகர் அப்புக்குட்டி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். (1.8.2012)
செயங்கொண்டம்,ஆக.6-செயங்கொண்டம் தந்தைபெரியார் சிலைக்கு எதிரில்ஜெயசூர்யா மருந்தக திறப்பு விழா 1.8.2012 புதன் காலை 9 மணிக்கு மண்டல செய லாளர் சி.காமராஜ் தலை மையில், சென்னை கூத் துப்பட்டறை கண்ணன் முன்னிலையில் நடந் தது.
டாக்டர் சாந்தகுமார் வரவேற்றார். துணைப் பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் திறந்து வைத்து உரை யாற்றினார். அவர் தமது உரையில் :
டாக்டர் படிப்புக்கு சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்பது ஒரு காலம். அப்படியென்றால் பார்ப்பனர்கள் மட்டுமே டாக்டராக வேண்டும் என்ற எண்ணம் தானே காரணம். அந் நிலையைஉடைத் தெறிந்து தாழ்த்தப் பட்ட - பிற்படுத்தப் பட்ட மக்கள் டாக்ட ராக வரக்கூடிய வாய்ப் பினை ஏற்படுத்தியவர் தந்தைபெரியாரே ஆவார்.திராவிடர் இயக்கமே காரணம். ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்கு பெரியார் பட்டபாடுகள் இன்றும் தமிழர் தலைவர் கி.வீர மணி படும்பாடுகள் மிகவும் அதிகம் என்று குறிப்பிட்டார்.
அடுத்து பேசிய தேசிய விருதுபெற்ற நடிகர்அப்புகுட்டி (அழகர்சாமியின் குதிரை) தமது பேச்சில், பெரியார்கொள் கையைநேசிப்பவன் நான். காரணம் உண்மை அதில் இருப்பதால், அன்பால் எதையும் சாதிக்க முடியும் என்று போதித்த புத்தரைப் போல, அறிவால் எதை யும் சாதிக்க முடியும் என்றவர் பெரியார். மூட நம்பிக்கையை வெறுக் கத் தூண்டியவர். விழிப் புணர்ச்சி மக்களுக்கு ஏற்பட விரும்பியவர் பெரியார்.
சுயமரியாதை தன்னம்பிக்கை என்னும் பெரியாரின் முழக்கங் கள் என்னைப் பெரிதும் கவர்ந்தவிசயங்கள். இவற்றை ஒவ்வொரு மனிதனும் கடைப்பிடித் தால் வாழ்வில் வெற்றி நிச்சயம்.தந்தை பெரியார் இதைத்தான் எதிர்பார்க்கிறார். மனிதன் மூடநம்பிக் கைக்கு ஆட்படும் போது எவ்வளவு வீண்செலவு, மனித உழைப்புகள் எவ் வளவு, திருவிழாக்கள் - பண்டிகைகள் மூலம் விரயமாகும் பொருள தார பாழ் எவ்வளவு. போதாதற்கு வாழ்வில் குழப்பம்தான் மிஞ்சும். தெளிவான வாழ்க்கை வாழ வேண்டும் என் றால் பெரியார் கொள் கையே தேவை.
தன்மனதில் பட்டதை, உண்மையை இவ்வளவு துணிச்சலாக சொன்னவர் பெரியார் மட்டுமே. பெரியார் நமது  தலைவர் என்பதே நமக் குப் பெருமை ஆகும். என்னால் முடிந்த அளவு பெரியார் கொள் கையை திரைப்படத் துறையில் கொண்டு செல்வேன். என் தனிப் பட்ட சந்திப்புகளிலும், பேச்சிலும் பெரியாரை சொல்லாமல் இருக்க மாட்டேன்.
முதலில் எனக்கு புத்தரை பிடிக்கும். புத்தரை தெரிந்ததால்தான் பெரியாரைப் பற்றியும் படிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டேன். தேடல்மூலமாக தெரிந்துகொண்டேன்.
மனவலிமை ஏற் படாமல் செய்வதே மூடநம்பிக்கை. மன வலிமை தேவையெனில் மூடநம்பிக்கை ஒழிக்கப் படவேண்டும். மனிதன் மனிதனை சுரண்டும், அடிமைப்படுத்தும் நிலை மாற வேண்டும் என்ற பெரியார் கொள்கை வென்றே தீரும். மாற்றம் நடந்தே தீரும் என்று குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் இரா.நீலமே கன், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் சின் னப்பன், தா.பழூர் ஒன் றிய தி.மு.க. செயலாளர் க.சொ.க.கண்ணன், செயங்கொண்டம் நகர தி.மு.க. செயலாளர் வெ. கருணாநிதி, அ.தி.மு.க தவசீலன், மாவட்ட தி.க. துணைத் தலைவர் இரா. திலீபன் மற்றும் வர்த்தக பிரமுகர்கள் பங்கேற் றனர். முடிவில் தவசீலன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment