Friday 7 September 2012

தமிழர்களின் அய்ந்து முக்கியப் பிரச்சினைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்ம்


அரியலூர்

சென்னை, செப்.3- இந்தியாவில் இலங்கை இராணுவத்தினருக்கு பயிற்சிஅளிக்கக் கூடாது. தமிழக மீனவர்கள் பிரச்சினையை தீர்க்க வேண்டும், கச்சதீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சேது சமுத்திரக் கால்வாய்த்திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும். காவிரி நீர் பெற்றுத் தரவேண்டும். முல்லைப்பெரியாறு நீர்ப்பிரச்சினை தீர்க்கப்படவேண்டும். பதவி உயர்வில் தாழ்த்தப் பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடுஅளிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை களை வலியுறுத்தியும், மத்திய அரசைக்கண்டித்தும் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் திராவிடர் கழகத்தின் சார்பில்  (31.8.2012) அன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள் வருமாறு:
அரியலூர் வட்டாட்சியர் அலுவலகம்முன்பு அரியலூர்மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் 31.8.2012 அன்று நடை பெற்றது. ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன் தலைமையில் மாவட்ட துணைச் செயலாளர் இரத்தின.இராமச்சந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள்: மு.சிங்காரம், சு.மணி வண்ணன், மண்டல இளைஞரணி செயலாளர் மு.இராசா ஆகியோர் முன்னிலையில் நடை பெற்றது. கழக தோழர்கள் திரளாக ஒலி முழக்க மிட்டனர். இறுதியாக அரியலூர் மாவட்ட செயலாளர் க.சிந்தனைச்செல்வன், திருச்சி மண்டல செயலாளர் சி.காமராசு ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஒன்றிய தலைவர் சி.சிவகொழுந்து, அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். இறுதியாக ஒன்றிய செயலாளர் செல்லமுத்து நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பொன்.செந்தில் குமார், க.கார்த்திகேயன், வெ.இளவரசன் மாசங்கர், சோ.க.சேகர், மு.முத்தமிழ்ச்செல்வன், த.சுப்புராயன், இரா.தமிழரசன், சொ.மகாலிங்கம், பழ.வெங்கடா சலம், நா.மருதமுத்து, இரா.கோவிந்தராசன், ப.மதியழகன், அ.இளவழகன், சே.எழில்மலை, கோ.கோபால் மற்றும் ஏராளமான தோழர்கள் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment