Sunday 17 June 2012

அரியலூர் மாவட்ட இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்



அரியலூர் மாவட்ட இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் மாநில இளைஞரணி செயலாளர்  இரா.செயக்குமார் உரையாற்றினார். உடன் மாவட்ட கழக பொறுப்பாளர்கள் உள்ளனர். அரியலூர் 10.6.2012

அரியலூர், ஜூன் 17- அரியலூர் மாவட்ட இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் 10.6.2012 அன்று காலை 11 மணிக்கு அரியலூர் எஸ்.எஸ்.திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில இளைஞரணி செயலாளர் இரா.செயக்குமார் தலைமையேற்று, உறுப்பினர் அட்டை வழங்கி இளைஞரணி யின் செயல்பாடுகள், அமைப்பை புதுப்பித்தல், உறுப்பினர் சேர்த்தல் தமிழர் தலைவரின் ஆயிரம் இளைஞர்கள் தேர்வு குறித்து சிறப்புரையாற்றினார்.
மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன், மாவட்ட செயலாளர் க.சிந்தனைச்செல்வன் ஆகியோர் திருச்சி மண்டல இளைஞரணி செயலாளர் வழக்குரைஞர் மு.இராசா ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர். பொதுக்குழு உறுப்பினர் மு.சிங்காரம், சு.மணிவண்ணன், பெரம்பலூர் மாவட்ட தலைவர் பெ.ஆறுமுகம், மாவட்ட துணைச் செயலாளர் இரத்தின.இராமச்சந்திரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பொன். செந்தில்குமார், மாவட்ட ப.க. துணை தலைவர் பா.இளங்கோவன், அரியலூர் ஒன்றிய செயலாளர் செல்லமுத்து, ஆண்டிமடம் ஒன்றிய தலைவர் தமிழரசன், செந்துறை ஒன்றிய செயலாளர் சோ.க.சேகர், அமைப்பாளர் மு.முத்தமிழ்ச்செல்வன், திருமானூர் சு.பார்த்திபன், ப. மதியழகன், ஆண்டிமடம் க.செந்தில், க.கார்த்திகேயன், தர்மேந்தர், தா.பழூர் ஒன்றிய செயலர் வெங்கடாசலம், புகழேந்தி, வஞ்சினபுரம் வெ.இளவரசன், சுப்புராயன், அரியலூர் மு. கோபாலகிருஷ்ணன், கே.பி.ஆசைத்தம்பி ஆகியோர் கருத்துரை வழங்கினர். இறுதியாக பார்த்திபன் நன்றி கூறினார்.
தீர்மானங்கள்
1. தமிழர் தலைவர் கி.வீரமணி தலைமையில் தந்தை பெரியார் தத்துவங்களைப் பரப்பிட நாடு முழுவதும் பிரச்சாரங்களை மேற்கொள்வது.
2. சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையிலும், இளைஞர்களின் உடல்நலம் மற்றும் உளநலத்தைப் பாதுகாக்கும் வகையில் இளைஞர்கள் மிதிவண்டியைப் பயன்படுத்த வேண்டும் என்ற தமிழர் தலைவரின் கட்டளையை ஏற்று கழக இளைஞர்கள் அனைவரும் மிதிவண்டியைப் பயன்படுத்துவது என முடிவு செய்யப்படுகிறது.
3. தமிழர் தலைவர் தலைமையில் தந்தை பெரியார் பணியை முடித்திட திராவிடர் கழக இளைஞரணிக்கு ஏராளமான இளைஞர் களைச் சேர்ப்பது என முடிவு செய்யப்படுகிறது.
4. பார்ப்பனர்களின் புரட்டுகளையும், திரிபு வாதங்களையும் எதிர் கொண்டு அவற்றை முறியடிக்கும் வகையில் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களால் எழுதப்பட்டு வெளிவரும் நூல்களை மக்கள் மத்தியில், இளைஞரணி சார்பில் பெரும் அளவில் பரப்புவது என முடிவு செய்யப்படுகிறது.

5. இளைஞரணி சார்பில் தெருமுனைக் கூட் டங்கள், மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலங்கள் நடத்துவது என முடிவு செய்யப்படுகிறது.
6. தமிழர் தலைவர் அவர்களின் அறிவுரைப்படி இளைஞர்கள் அனைவரும் கணினி, இணையதளங்களைப் பயன்படுத்த கற்றுக் கொள்வது என முடிவு செய்யப்படுகிறது.
அரியலூர் மாவட்ட இளைஞரணி புதிய பொறுப்பாளர்கள்:
தலைவர்: பொன். செந்தில்குமார், செந்துறை. செயலாளர்: க. கார்த்திகேயன், ஆண்டிமடம்.
அமைப்பாளர்: சு.பார்த்திபன், திருமானூர். துணைத் தலைவர்: லெ.அர்ச்சுனன், செயங்கொண்டம்.
துணைச் செயலாளர்: வெ.இளவரசன், செந்துறை.

No comments:

Post a Comment