Saturday 16 June 2012

நுழைவுத் தேர்வை எதிர்த்து ஆர்ப்பாட்டம்!




அடுத்த ஆண்டு முதல் அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில்சிபல் அறிவித்ததைக் கண்டித்து அரியலூர் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் அரியலூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் 12.6.2012 அன்று நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி மண்டல இளைஞரணி செயலாளர் வழக்கறிஞர். மு.இராசா தலைமையேற்றார். திராவிடர் கழக மண்டலச் செயலாளர் செ.காமராஜ, மாவட்டத் தலைவர் விடுதலை நீலமேகம், மாவட்டச் செயலாளர் க.சிந்தனைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்புரை ஆற்றினர். மாவட்ட இளைஞரணி தலைவர் செந்தில்குமார் வரபேற்புரையாற்றினார். மாவட்ட இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட மாணவரணி பொறுப்பாளர் ரகுபதி, பொதுக்குழு உறுப்பினர்கள் மு.சிங்காரம், சு.மணிவண்ணன், அரியலூர் ஒன்றியத் தலைவர் சிவக்கொழுந்து, பொறியாளர் கோவிந்தராஜ், செந்துரை ஒன்றிய செயலாளர் செந்துரை ஒன்றிய தலைவர் சோ.க.சேகர், ஜெயங்கொண்டம் ஒன்றிய தலைவர் வை. செல்வராஜ், செந்துறை ஒன்றிய தலைவர் மா.சங்கர், மாவட்ட துணைத் தலைவர் இரத்தின இராமச்சந்திரன், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் இளவரசன், வடசென்னை மாவட்ட இளைஞரணி செயலாளர் வை.கலையரசன், திருச்சி மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் தமிழ்மணி, ஆண்டிமடம் ஒன்றியத் தலைவர் இரா.தமிழரசன், ஆண்டிமடம் ஒன்றியச் செயலாளர் தியாக.முருகன், ஆண்டிமடம் செந்தில், செந்துறை ஒன்றிய அமைப்பாளர் மு. முத்தமிழ்ச் செல்வம், சுப்பராயன், மோகன்ராஜ், வஞ்சினாபுரம் கருப்பையா, அய்யப்பன், இராமகிருஷ்ணன், பாரதிராஜா, ஆண்டிமடம் இராமச்சந்திரன், அரியலூர் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மரவனூர் மதியழகன், ஜெயங்கொண்டம் ஒன்றிய செயலாளர் மா.கரு ணாநிதி, தாப்பனூழுர் ஒன்றிய இரா. இராமச்சந்திரன், தமிழ்சேகரன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்  பா.மதியழகன், வாரியங்காவல் மதியழகன், குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment